மேலும் அறிய

Bhoodha Narayanan Temple: சுருளி மலை பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள்..!

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களில் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது அருள்மிகு பூத நாராயண சுவாமி திருக்கோயில்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. இந்த அருவியில் சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. அருவிக்கு செல்லும் நுழைவு வாயிலில் அமைந்துள்ளது அருள்மிகு பூதநாராயண சுவாமி திருக்கோயில். சுருளியாறு, வெண்ணியாறு, கன்னிமார் ஊற்று ஆகிய மூன்று மூலிகை நீர்களும் சங்கமிக்கும் இத்தலத்திற்கு அருகிலேயே சுருதியுடன் கூடிய சுருளி எனும் சுரபி நதி நீர் அருவியாக கொட்டுகிறது.

Movie Release Today: சினிமா ரசிகர்களே.. இன்று மட்டும் 16 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?

கானகத்தின் நடுவே பல மூலிகைகள் கலந்து அற்புத சக்தியுடன் விழும் இந்த அருவியில் நீராட தீராத நோய்கள் தீரும் என்று ஐதீகம் உள்ளது. சுற்றுப்பிரகாரத்தில் உக்கிர நரசிம்மர், தட்சிணாமூர்த்தி, வல்லப கணபதி நவகிரக சன்னதிகள் உள்ளன. முன்னோர்கள் முக்தி அடைய காசி ராமேஸ்வரம் சென்று புண்ணிய காரியம் செய்ய முடியாதோர் அமாவாசை நாளில் இங்கு வந்து திதி கொடுக்கின்றனர். இத்தலம் புண்ணியங்கள் செய்யும் தலமாகவும் மட்டுமின்றி சிறந்த சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.

Bhoodha Narayanan Temple: சுருளி மலை பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள்..!

இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவருக்கு அவல், பழங்கள் ,நெய்வேத்தியம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இத்தலத்தில் விநாயகர் வல்லப கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். வருடந்தோறும் சித்திரையில் மூன்று வார திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி எனும் விசேஷ நாட்களில் இங்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கம்.

‘கள்ளச்சாராய தடுப்பு முதல் கொம்பன் ஜெகன் என்கவுண்டர் வரை’ திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ்-சின் அதிரடிகள்..!

Bhoodha Narayanan Temple: சுருளி மலை பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள்..!

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்குள்ள சுரபி நதியில் நீராடி அதாவது சுருளி அருவியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும். துன்பங்கள் நிவர்த்தி அடையும். நல்வாழ்வு கிட்டும் என்று பக்தர்கள் நம்புவதால் பல மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் இந்த கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு நேர்த்திக்கடனாக நினைத்த காரியம் வெற்றிபெற சுவாமி மாலைகள் சாத்தி தேங்காய் பழம் அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைத்து அன்னதானமும் வழங்கப்படுகின்றன.

Afghanistan Embassy: டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடிய ஆப்கானிஸ்தான்: இதுதான் காரணம்!

Bhoodha Narayanan Temple: சுருளி மலை பூத நாராயணன் கோயிலின் சிறப்புகள்..!

இந்த தலத்தின் பெருமையாக மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் வந்தபோது நெடுவேள் குன்றம் எனும் சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறைக்கு சென்றதாகவும் தகவல்கள் உண்டு. இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையை குறித்து இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அழகாகவும் பாடியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும் பல அற்புதங்களையும் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணு என்ற கோலத்தில் பூத நாராயணனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என நம்பப்படுகிறது

தலைப்பு செய்திகள்

சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget