மேலும் அறிய

Afghanistan Embassy: டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தரமாக மூடிய ஆப்கானிஸ்தான்: இதுதான் காரணம்!

Afghanistan embassy: டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் நிரந்தரமாக மூடப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Afghanistan embassy: இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்வதால், ஆப்கானிஸ்தான் தூதரகம் டெல்லியில் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடல்:

இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசிடம் இருந்து எதிர்கொண்டு வரும் சவால்களை குறைக்கும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி டெல்லியில் உள்ள தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக எங்களுக்கு சாதகமான சூழல் உருவாகுன் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், டெல்லியில் உள்ள எங்களது தூதரகத்தை 23-11-2023 முதல் நிரந்தரமாக மூடும் முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு கொள்கை மற்றும் நலன்கள் சார்ந்த பரந்த மாற்றங்களின் விளைவாகும். இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் குடிமக்கள்,  எங்களது பணிக்காலத்தின் போது வழங்கிய புரிதல் மற்றும் ஆதரவிற்காக தூதரகம் தனது உண்மையான நன்றியைத் தெரிவிக்கிறது” என தெரிவித்துள்ளது.

இந்தியாவே இறுதி முடிவு எடுக்கும்?

ஆப்கானிஸ்தான் குடியரசைச் சேர்ந்த தூதர்கள் யாரும் தற்போது இந்தியாவில் இல்லை. தேசிய தலைநகர் டெல்லியில் பணியாற்றியவர்கள் பாதுகாப்பாக வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். "ஆப்கான் குடியரசின் தூதரக அதிகாரிகள் பணியை இந்திய அரசாங்கத்திடம் மட்டுமே ஒப்படைத்துள்ளனர். தூதரகத்தின் பணியின் தலைவிதியை முடிவு செய்வது, அதை மூடுவதைத் தொடர வேண்டுமா அல்லது மாற்று வழிகளைக் கருத்தில் கொள்வது, அதை ஒப்படைக்கும் சாத்தியம் உட்பட, அனைத்துமே தற்போது இந்திய அரசாங்கத்தின் முடிவில்தான் உள்ளது” எனவும் தாலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு வருவதில் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை நாங்கள் கவனமாக பரிசீலித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு அளித்த ஆதரவிற்கும் உதவிக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

சரிந்த ஆப்கானிஸ்தான் சமூகம்:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதுமே, அங்கு மக்களாட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த அரசானது பெண் கல்வி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில்,  கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள், மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், இங்கு ஆப்கானிய சமூகம் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது என்று அந்நாட்டு தூதரகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  ஆகஸ்ட் 2021 முதல் இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மிகவும் குறைந்த அளவிலான புதிய விசாக்கள் வழங்கப்படுகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ
பெட்ரோல் கார்களுக்கு ஆபத்து? உலக ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் மாற்றம்! விபரம் இதோ

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget