Ayudha Pooja Wishes: களைகட்டும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி...! சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிரும் மக்கள்..!
Ayudha Pooja Saraswati Puja 2022 Wishes in Tamil: தமிழ்நாட்டில் வீடுகளில் ஆயுத பூஜையும், விஜயதசமி பூஜையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
செப்டம்பர் 4ஆம் தேதி நவமி திதியன்று ஆயுத பூஜையும், செப்டம்பர் 5 ம் தேதி தசமி திதியில் விஜயதசமியும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக உள்ள இந்த விழாக்களை, புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் தொடங்கி 9 நாட்கள் துர்கா தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு நவராத்திரியை வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர்.
Durgashtami
— S. S. Moorthy (@mystiquememoir) October 3, 2022
Mahanavami
And
Vijaya Dashami
Pooja will be done with the photo of Mata Vaishno Devi , Given to me by Astro Client turned good friend n extended family.
Bolo Ambe Maate Ki . pic.twitter.com/3wR4v9Tavw
அதே நேரம் தமிழ்நாட்டில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டும், நவராத்திரியின் 9ஆம் நாளான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும் அடுத்த நாள் விஜயதசமியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
just another day for someone here
— mhisa🦌 (@sutolreednier) September 30, 2022
but Subha Navaratri and Vijaya Dashami everyone celebrating. ❤️🕉️ pic.twitter.com/zAuJlijxeH
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமி திதியில் ராமன் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் சில கூறுகின்றன.
View this post on Instagram
இந்த போருக்காக துர்க்கை தெய்வம் ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக பொதுமக்கள் தங்கள் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
View this post on Instagram
பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் இந்த விழா நாள்களில் தொடர் விடுமுறை பொதுவாக வரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்தும், உறவினர்களுடன் இணைந்தும், இணையத்தில் வாழ்த்து செய்திகளைப் பகிர்ந்தும் கொண்டாடி மகிழ்கின்றனர்.