கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் காலபைரவருக்கு அஷ்டமி பூஜை
கால பைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வடைமாலை சாத்திய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி பல்வேறு சோடச உபச்சாரங்கள் நடைபெற்ற பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பூஜை காலபைரவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு என்னைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து கால பைரவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து வடைமாலை சாட்சிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி பல்வேறு சோடச உபச்சாரங்கள் நடைபெற்ற பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது.
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவர் சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்