மேலும் அறிய

அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை - எவ்வளவு வசூல்?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 05 லட்சத்து 96 ஆயிரம் ரூபாயும் தங்கம் 388 கிராம் பக்தர்கள் உண்டியலில் செலுத்தினர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளியூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.  இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்காக பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நாள் 17ஆம் தேதி 11.27 தொடங்கி 18 தேதி 9.10 நிறைவடைந்தது. பக்தர்களின் கூட்டம் திருவண்ணாமலையில் அலைமோதியது. கிரிவலம் வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலை நகரின் வெளி சுற்றுவட்ட சாலையில் 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 

புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் 

புரட்டாசி பௌர்ணமி இரவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு பேருந்துகள் மூலம் வந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கார், வேன் மட்டுமின்றி பேருந்துகளில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர். வாகனம் நிறுத்தும் இடங்களில் பெரும்பாலும் ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் கோவில் உள்ளே சென்று கூட்ட நெரிசலில் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக ராஜகோபுரம்,அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பேகோபுரம், ஆகிய நான்கு கோபுரம் நுழைவாயிலிலும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோவிலில் பணிபுரியும் கோவில் ஆட்களும் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் பௌர்ணமி இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பௌர்ணமி முடிந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து கிரிவலம் சென்றனர்.

புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார நடைப்பெற்றது. கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோயில் உண்டியலில் 3 கோடியே 05 லட்சத்து 96 ஆயிரத்து 085 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 388 கிராம் தங்கம், 1.652 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது. அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சமீபகாலமாக உண்டியல் காணிக்கை மாதந்தோறும் 3 கோடி தான்டி செல்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Retention List: அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
IPL 2025:ஐபிஎல் ரீடெய்ன்; யார் உள்ளே? யார் வெளியே?முழு லிஸ்ட் இதோ
IPL 2025:ஐபிஎல் ரீடெய்ன்; யார் உள்ளே? யார் வெளியே?முழு லிஸ்ட் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Viral video : ”வெளிய போ..சீமான்!”விரட்டியடித்த பசும்பொன் மக்கள் தேவர் ஜெயந்தியில் பரபரப்புUdhayanidhi wishes Ajith : ”ஒன்றிணைந்து செயல்படுவோம்” அஜித்தை அழைத்த உதயநிதி!கொண்டாடும் AK ரசிகர்கள்Annapoorani Arasu Amma : லிஸ்ட் பெருசா போகுதே 3வது திருமணத்திற்கு ரெடியான சர்ச்சை சாமியார் அன்னபூரணிPinarayi Vijayan Accident : விபத்தில் சிக்கிய பினராயி ஒன்றோடு ஒன்று மோதிய கான்வாய் பரபரப்பான கேரளா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Retention List: அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
அலப்பறை கிளப்ப ரெடியா? சென்னை அணி தக்க வைத்த 5 வீரர்கள் யார்? யார்?
IPL 2025:ஐபிஎல் ரீடெய்ன்; யார் உள்ளே? யார் வெளியே?முழு லிஸ்ட் இதோ
IPL 2025:ஐபிஎல் ரீடெய்ன்; யார் உள்ளே? யார் வெளியே?முழு லிஸ்ட் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
Amaran Movie Review : மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன் வென்றாரா? அமரன் பட முழு விமர்சனம் இதோ
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
ராணுவ வீரர்களுடன் தித்திக்கும் தீபாவளி.. ஸ்வீட் எடுத்து கொண்டாடிய பிரதமர் மோடி!
IPL Retention List: ஏலத்தில் குதிக்கும் 3 முக்கிய தலைகள்.. ரிஷப் Pant-ஐ தட்டி தூக்குமா சிஎஸ்கே?
IPL Retention List: ஏலத்தில் குதிக்கும் 3 முக்கிய தலைகள்.. ரிஷப் Pant-ஐ தட்டி தூக்குமா சிஎஸ்கே?
5ஆம் தேதிக்கு முன்பு போர் நிறுத்தம்.. ஹிஸ்புல்லா இயக்கத்தின் ட்விஸ்ட்.. ஏற்குமா இஸ்ரேல்?
5ஆம் தேதிக்கு முன்பு போர் நிறுத்தம்.. ஹிஸ்புல்லா இயக்கத்தின் ட்விஸ்ட்.. ஏற்குமா இஸ்ரேல்?
Diwali 2024 : தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் குவிந்த மக்கள்! டக்கு டக்குன்னு விற்று தீர்ந்த இறைச்சி!
Diwali 2024 : தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் குவிந்த மக்கள்! டக்கு டக்குன்னு விற்று தீர்ந்த இறைச்சி!
பிரச்னை ஓவர்.. தீபாவளி ட்ரீட்  கொடுத்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்.. சீன ராணுவ வீரர்கள் ஹேப்பி!
சீன ராணுவ வீரர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. கொண்டாடி மகிழ்ந்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள்!
Embed widget