கரூர் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி
கரூர் குளத்துப்பாளையம் ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி.

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு ருக்மணி சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் கடந்த மார்கழி 1-ம் தேதி முதல் தற்போது வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக கடந்த 10.01.2025 மார்கழி 26 ஆம் தேதி வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலய மண்டபத்தில் திருமண கோலத்தில் சுவாமியை கொலுவிருக்க செய்தனர்.
பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் யாகங்கள் நடத்தி தொடர்ச்சியாக சுவாமிக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பூணூல் அறிவிக்கும் நிகழ்ச்சியும் கங்கண கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியை தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று தொடர்ச்சியாக சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கும் துளசி உள்ளிட்ட பிரசாதங்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.

