Madurai: சித்திரை திருவிழாவின் பணிகளை தொடங்கிய அழகர் கோயில் நிர்வாகம்
வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் பொன் சப்பரம் சீரமைத்து புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ளது அழகர் கோயில் நிர்வாகம்.
கொரோனா தொற்று காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. இருப்பினும் சித்திரைத் திருவிழாவில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆகம விதிப்படி கோயில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றுது. சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடுக்கு முன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். டங்கா மாடு, யானை, குதிரை, ஒட்டகம் என்று விலங்குகள் சில குழந்தைகள் உற்சாகப்படுத்தும். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டு கடந்தாண்டு முதல் வழக்கமான சித்திரை திருவிழா நடைபெற்றது.
வாராரு வாராரு அழகர் வாராரு !
— arunchinna (@arunreporter92) March 28, 2023
சப்பரம் ஏறி வாராரு நம்ம சங்கடம் தீர்க்க போறாரு உலகம் காக்க வாராரு உள்ள கழகம் தீர்க்க போறாரு...!
எதிர்வரும் சித்திரைத் திருவிழாவிற்கு பழமையான சப்பரம் தயார் செய்யப்பட்டு வருகிறது !#abpnadu | @SRajaJourno | @LPRABHAKARANPR3 | @JeeVaigai #madurai |... pic.twitter.com/A7rHZ5ixdM
உலகப் பிரசித்திபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் கள்ளழகர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாவாக நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டமும், கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவது போன்று முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்