மேலும் அறிய
ஆடி அமாவாசை: மதுரை வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏன் முக்கியம்?
Aadi Amavasai: மதுரை வைகை ஆற்றில் குவிந்த பக்தர்கள்... முன்னோர்களுக்கு தர்ப்பணம் ஏன் முக்கியம்? அறிய இதோ முழுமையாக வாசிக்கவும்.

ஆடி அமாவாசை
Source : whats app
வைகை ஆற்றின் கல்பாலம், ஓபுளா படித்துறை, பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சூரியனை வழிபட்டனர்.
ஆடி அமாவாசை
ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ”ஆடி அமாவாசை” என்பது சிறப்மிக்கது. இத்தருணத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வழிபாடு செய்து பொதுமக்கள் வழிபட்டனர். மனித வாழ்வியலில் 5 நபர்களை காக்க வேண்டும் என்று வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார். அதில்,
குறல் - "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"
தென்புலத்தார், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.
அமாவாசை என்பது மிகவும் சிறந்த நாள்.
அமாவாசை என்பது முழுமை பெற்ற நாள். எனவே, நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும் தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம் என்று கூறுவார்கள். நம் முன்னோர்களுக்கு இன்றைய தினம் எள்ளும் தண்ணீரும் கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும். எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த வழிபாடு நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுத்த மதுரை மக்கள்
மதுரையில் அந்த வகையில் இன்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு வைகை ஆற்றில் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். வைகை ஆற்றில் எள்ளு பிண்டம் வைத்து 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களுது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். குறிப்பாக வைகை ஆற்றின் கல்பாலம், ஓபுளா படித்துறை, பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சூரியனை வழிபட்டனர்.
மேலும் படிக்கவும்





















