மேலும் அறிய

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்ததலத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை தக்ஷனுடைய யாகத்தில் சாபம் அடைந்த பிரம்மதேவன் வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றதுடன், சூரபத்மன் மயில் உருவாய் பெற்ற பின் ஆறு திருமுகங்களைக் கொண்ட இம்முருக பெருமானை வணங்கி ஞான உபதேசம் பெற்று, மயில் வாகனமாக இருக்கின்ற ஸ்தலமாக இது விளங்கி வருகிறது.  

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

இங்கு தக்ஷிணாமூர்த்தி தக்ஷண கோஷ்டத்தில் மயில் வாகனத்தில் அமர்ந்து ஞான குகனாக அருள் பாலிக்கிறார். இது வேறு எங்கும் இல்லாத தனி சிறப்பாகும். ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன், கடம்ப மாலை, மதங்க அணிகலன்களுடன்  முருக பெருமான் காட்சியளிக்கும் புண்ணிய தலமான இந்தகோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு குடமுழுக்கு விழா முதல் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி நடந்து விழாவின் முக்கிய நாளான கும்பாபிஷேக தினத்தில் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து. தொடர்ந்து பூரணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.

Prabath Jayasuriya Record: டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் பிரபாத்..!

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து 9.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஆனந்தவல்லி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தி வைத்தனர். பின்னர் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

Tamil Thai Vazhthu: கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஈஸ்வரப்பா போன்றோருக்கு ராமதாஸ் பகிரங்க எச்சரிக்கை!

700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகேசன், ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும்  குலதெய்வக்காரர்கள், கிராமவாசிகள் கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பெரம்பூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Ponniyin Selvan 2: அமெரிக்காவில் கொடி நட்ட சோழர்கள்..! சுதந்திர தேவி சிலை முன்பே பொன்னியின் செல்வன் 2 ப்ரமோஷன்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!

Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி

Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
திரைப்படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்: அன்பு வேண்டுகோள் மூலம் செக் வைத்த பிரேமலதா!
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Breaking News LIVE, June 5: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
England Election 2024: அட்ராசக்க..! இங்கிலாந்து எம்.பி., ஆன தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் - அபார வெற்றி
Rishi Sunak:
Rishi Sunak: "தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது... மன்னிக்கவும்" - தோல்வியை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் 
Vikravandi By-election: விக்கிரவாண்டிக்கு வீடியோ போதும்; நேரில் வேண்டாம்: முதல்வரிடம் அமைச்சர்கள் வைத்த வேண்டுகோள்! காரணம் என்ன?

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - தனிப்பெரும்பான்மை பெற்ற எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் கட்சி படுதோல்வி

நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..

நாங்குநேரி: லாரி மீது பைக் மோதி விபத்து: தூக்கிவீசப்பட்ட காதல் ஜோடி சம்பவ இடத்திலேயே பலி

Embed widget