மேலும் அறிய

Prabath Jayasuriya Record: டெஸ்டில் அதிவேக 50 விக்கெட்டுகள்... புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் பிரபாத்..!

இலங்கை அணியின் பிரபாத் ஜெயசூர்யா டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

பால்பிரைன் தலைமையிலான அயர்லாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதி வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அயர்லாந்து அணி 492 ரன்களை குவித்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 704 ரன்களை குவித்தது. அயர்லாந்து அணி தற்போது ஆட்டத்தை டிரா செய்ய போராடி வருகிறது

அதிவேக 50 டெஸ்ட்:

இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் இரு அணி தரப்பிலும் இரட்டை சதங்களையும், சதங்களையும் விளாசியுள்ள நிலையில் இலங்கை பந்துவீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா புதிய வரலாறு படைத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு பிரபாத் ஜெயசூர்யா 43 விக்கெட்டுகளுடன் களமிறங்கினார். அயர்லாந்தின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும், அயர்லாந்தின் 2வது இன்னிங்சில் தற்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்தியும் ஆடி வருகிறார்.

இந்த போட்டியில் அவர் 7வது விக்கெட்டை கைப்பற்றியபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 50வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது வீரர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.  ஆசிய கண்டத்தில் அதிவேகமாக 50 விக்கெட்டுளை கைப்பற்றிய வீரர், இலங்கை அணிக்காக அதிவேகமாக டெஸ்டில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் பிரபாத் ஜெயசூர்யா படைத்துள்ளார்.   

இலங்கை வீரர் பிரபாத்:

ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவினவ் வேகப்பந்துவீச்சாளர் சார்லி டர்னர் தன்வசம் வைத்துள்ளார். சார்லி டர்னர் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளிலே டெஸ்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிரபாத் ஜெயசூர்யா 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். பிரபாத் ஜெயசூர்யா மட்டுமின்றி இங்கிலாந்தின் ரிச்சர்ட்சன், இங்கிலாந்தில் பிலாண்டர் ஆகியோரும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை அஸ்வின் தன்வசம் வைத்துள்ளார். அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த புதிய வரலாறை படைத்துள்ள ஜெயசூர்யா கடந்தாண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். 31 வயதான பிரபாத் ஜெயசூர்யா 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சாளரான இவர் இலங்கை அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

மேலும் படிக்க: Watch Video: 'குறுக்க இந்த கௌசிக் வந்தா..?' கேப்டன் கூல் தோனியையே கோபப்படுத்திய பதிரானா..! வைரலாகும் வீடியோ..!

மேலும் படிக்க: LSG vs PBKS: அதிரடி வெற்றி பெறுமா பஞ்சாப்? புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!

தலைப்பு செய்திகள்

ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
Enfield Hunter 350 on EMI: என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
என்ஃபீல்டின் ஹார்ட்டை கவரும் ஹண்டர் 350 பைக்க வாங்க முன்பணம் எவ்ளோ வேணும்.? EMI எவ்வளவு வரும்.?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Chennai Power Cut: சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்
சென்னைல ஜூலை 23-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? இதோ பெரிய லிஸ்ட்
Embed widget