மேலும் அறிய
Novak Djokovic : ‘நான் தான் அயன் மேன்..’ நெஞ்சின் மீது சிப் - உடன் களமிறங்கிய பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!
"சிறுவயதில் நான் அயர்ன் மேனை மிகவும் விரும்பினேன், அதனால் நான் அயர்ன் மேனாக மாற செய்ய முயற்சிக்கிறேன்," என்று கூறியுள்ளார் ஜோகோவிச்.

நோவக் ஜோகோவிச்
1/6

பாரிஸில் நடந்த பிரெஞ்சு ஓபன் 2023 இல் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மார்டன் ஃபுசோவிக்ஸுக்கு எதிராக செர்பிய டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் களமிறங்கினார்.
2/6

அந்த ஆட்டத்தின் போது ஜோகோவிச்சின் மார்பில் ஒரு சிறிய, மர்மமான பொருள் இருப்பது பலரால் கவனிக்கபட்டது. இது விளையாட்டில் செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் நானோ தொழில்நுட்ப சாதனம் என்று கூறப்படும் நிலையில், "எனது கெரியரின் மிகப்பெரிய ரகசியம்" என்று ஜோகோவிச் கூறியுள்ளார்.
3/6

சிப் பற்றி கேட்டபோது ஜோகோவிச், "சிறுவயதில் நான் அயர்ன் மேனை மிகவும் விரும்பினேன், அதனால் நான் அயர்ன் மேனாக மாற செய்ய முயற்சிக்கிறேன்," என்று கேலி செய்தார், மேலும் "எனது குழுவே நம்பமுடியாத அளவுக்கு திறமையை வெளிப்படுத்த, இந்த நானோ தொழில்நுட்பம் எனக்கு உதவுகிறது, அது மிகப்பெரிய ரகசியம். அது இல்லையென்றால், நான் இப்போது இந்த இடத்தில் இருக்க மாட்டேன்," என்றார்.
4/6

தாவோ டெக்னாலஜிஸ் என்ற இத்தாலிய நிறுவனம், "மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான புதுமையான நானோ தொழில்நுட்ப சாதனங்களை காப்புரிமை பெற்று உருவாக்குவதில்" நிபுணத்துவம் பெற்றுள்ளது,இதுவே ஜோகோவிச் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் பின்னாலும் இருப்பதாகக் கூறியுள்ளது.
5/6

இந்த சிப், உள்ள வெப்பத்தை ஒளியாக மாற்றி அதனை, நரம்பு மண்டலத்திற்கு அனுப்புகிறது என்று ஜோகோவிச் நெஞ்சில் சிப் இருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலான பிறகு, அந்த நிறுவனம் இந்த சாதனம் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டது.
6/6

முன்னணி விளையாட்டு இவ்வாறு வினோதமான சிப் பயன்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 03 Jun 2023 04:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement