மேலும் அறிய
DD Vs SS : சேலம் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி!
நேற்று நடந்த டி.என்.பி.எல் போட்டியில் திண்டுக்கல் அணி சேலம் அணியை எதிர்கொண்டது. இதில் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி சேலம் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி
1/6

டி.என்.பி.எல் 7 வது சீசன் போட்டியின் 26வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேலம் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்ற திண்டுக்கல் சேலம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
2/6

தொடக்க ஆட்டக்காரரான கௌசிக் காந்தி 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஆர் கவினுடன் கைகோர்த்த சன்னி சந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தார்.
3/6

20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது சேலம். அதிகபட்சமாக சன்னி சந்து 4 சீக்சர், 2 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார்.
4/6

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தோடு பேட்டிங் செய்ய களமிறங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ்.
5/6

தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப விமல் குமாருடன் கைகோர்த்தார் பாபா இந்திரஜித். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் ரன்கள் மளமளவென உயர்ந்தது.
6/6

பாபா இந்திரஜித் அரைசதம் விளாச 18.2 ஓவரில் அணி வெற்றி கனியை ருசித்தது திண்டுக்கல். இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் புள்ளிப்பட்டியல் இரண்டாம் இடத்தை பிடிப்பதோடு பிளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆட்டத்தில் பாபா இந்திரஜித் அதிகபட்சமாக 83 ரன்கள் எடுத்திருந்தார்.
Published at : 04 Jul 2023 11:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion