மேலும் அறிய
DD Vs ITT : விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்!
7வது சீசன் டிஎன்பிஎல் போட்டி தற்போது சேலத்தில் நடந்து வருகிறது. நேற்று திண்டுக்கல் அணிக்கும் திருப்பூர் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ்
1/6

7வது சீசன் டிஎன்பிஎல் போட்டி தற்போது சேலத்தில் நடந்து வருகிறது. நேற்று திண்டுக்கல் அணிக்கும் திருப்பூர் அணிக்கும் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது திருப்பூர் தமிழன்ஸ்.
2/6

தொடக்க ஆட்டக்காரரான ராதாகிருஷ்ணன், துஷார் ரஹேஜா ஆகியோர் திருப்பூர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தரவில்லை. இவர்களுக்கு பின்னால் களமிறங்கிய சாய் கிஷோர்,விஜய் சங்கர் ஆகியோர் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
3/6

20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது திருப்பூர் தமிழன்ஸ். அதிகபட்சமாக சாய் கிஷோர் 45 ரன்கள் அடித்தார்
4/6

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய திண்டுக்கல் அணி அபாரமாக ஆட ஆரம்பித்தது.
5/6

தொடக்க ஆட்டக்காரரான விமல் குமார் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆதித்யா கணேஷுடன் கைகோர்த்த சிவம் சிங் அதிரடியாக ஆடினார்.
6/6

18.3 ஓவரில் திண்டுக்கல் அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது .இந்த போடியில் திண்டுக்கல் அணிக்காக 74 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்த சிவம் சிங்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Published at : 29 Jun 2023 01:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion