மேலும் அறிய
Vande Bharat சென்னையில் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்..பயணிகளையும் சந்தித்து பேசினார்!
Vande Bharat Chennai: சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி, சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்
1/9

சென்னை கோவை இடையிலான தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி சென்னை சென்ட்ரலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2/9

பிரதமரைக் காண, திரளான மக்கள் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்திருந்தனர்
3/9

வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தவுடன், பிரதமர் மோடி ரயில் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
4/9

சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்குப் பிறகு சென்னையில் இருந்து இயக்கப்படும் இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இதுவாகும்.
5/9

இந்த ரயிலில் ஒரு எக்ஸிகியூட்டிவ் கோச் உட்பட 8 பெட்டிகள் உள்ளது. 530 பேர் வரை பயணிக்க முடியும். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.
6/9

சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே 495.28 தூரத்தை 5 மணி 50 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு மற்றும் சேலத்தில் நிறுத்தப்படும். புதன்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
7/9

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். திரும்பும் போது, சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 8.30 மணிக்கு கோவை சென்றடையும்.
8/9

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டின் முக்கிய வணிக மற்றும் நகர்ப்புற மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9/9

இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டதன் மூலம், சென்னை மற்றும் கோவையைச் சுற்றியுள்ள வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட் சந்தைகள் மிகப்பெரிய வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 09 Apr 2023 09:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion