மேலும் அறிய
Kalaignar Karunanidhi : கடலோரம் துயிலும் கலைஞரை நினைவுக்கூற நடந்த அமைதி பேரணி!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இப்பேரணியில், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ வேலு, கே.என். நேரு என அமைச்சர்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணகானோர் கலந்துகொண்டனர்.

திமுக அமைதி பேரணி
1/10

திமுக முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
2/10

கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
3/10

இந்த ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகே புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெற்றது.
4/10

ஓமந்துராரில் இருக்கும் கருணாநிதி சிலைக்கு கீழே இருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் அமைதிப் பேரணி தொடங்கியது.
5/10

இந்த பேரணியில், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ வேலு, கே.என். நேரு என அமைச்சர்கள் உட்பட, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணகானோர் கலந்துகொண்டனர்.
6/10

இதனைத் தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வண்ணப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
7/10

மேலும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
8/10

இதற்கு முன்னதாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
9/10

தமிழ் உயிர் எழுத்துகளின் பதாகையை ஏந்தி நிற்கும் சிறு பிள்ளைகளின் புகைப்படம்.
10/10

தலைமுறை போற்றும் தலைவனுக்கு வணக்கம்!
Published at : 07 Aug 2023 11:11 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement