மேலும் அறிய
Suraikai Paratha Recipe : சத்துக்கள் நிறைந்த சுரைக்காய் பராத்தாவை இன்றே செய்து பாருங்கள்!
Suraikai Paratha Recipe : சத்தான சுவை மிகுந்த இந்த சுரைக்காய் பராத்தாவை வீட்டில் செய்து அசத்துங்கள்.

சுரைக்காய் பராத்தா
1/6

தேவையான பொருட்கள் : சுரைக்காய் - 1, கோதுமை மாவு - 2 கப், பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு துருவியது, உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி, தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, ஆம்சூர் தூள் - 1 1/2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, ஓமம் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்), கசூரி மேத்தி - 1 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை - 1 மேசைக்கரண்டி, எண்ணெய், நெய்.
2/6

செய்முறை: முதலில் சுரைக்காயை கழுவி சுத்தம் செய்யவும். தோலை உரித்து, காயை துருவவும். பின் ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை எடுத்து கொள்ளவும்.
3/6

பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், ஓமம், கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
4/6

அடுத்து கோதுமை மாவை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும். மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
5/6

மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருவாக்கவும்.
6/6

மாவு உருண்டைகளை ரொட்டிகளாக உருட்டி, சிறிது நெய் விட்டு தவாவில் இருபுறமும் வேகவைக்கவும். சுவையான சுரைக்காய் பராத்தா தயார்.
Published at : 26 Jan 2024 10:28 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion