மேலும் அறிய
Baby Corn Masala : சப்பாத்தி, பூரிக்கு அசத்தலான சைட் டிஷ்..பேபி கார்ன் மசாலா ரெசிபி!
Baby Corn Masala : சப்பாத்தி மற்றும் பூரிக்கு போரிங்கான சைட் டிஷ்ஷை செய்து சலித்துவிட்டதா..? இந்த சுவையான பேபி கார்ன் மசாலாவை செய்து அசத்துங்கள்.

பேபி கார்ன் மசாலா
1/6

தேவையான பொருட்கள் : பேபி கார்ன் - 400 கிராம், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , தனியா தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி விழுது - 3 பழம், தண்ணீர் - 2 கப், முந்திரி பருப்பு விழுது, கரம் மசாலா தூள் -1 தேக்கரண்டி, கசூரி மேத்தி , கொத்தமல்லி இலை நறுக்கியது.
2/6

செய்முறை : முதலில் சூடான தண்ணீரில் நறுக்கிய பேபி கானை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். பின்பு வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
3/6

கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4/6

இஞ்சி பூண்டு விழுது மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்துவிடவும். பின்பு மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், காஷ்மீரி மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
5/6

வேகவைத்த பேபி கானை சேர்த்து தண்ணீர் ஊற்றி கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பின்பு கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, நறுக்கிய கொத்தமல்லிஇலை சேர்த்து கலந்து இறக்கவும்.
6/6

அவ்வளவு தான் சுவையான பேபி கார்ன் மசாலா தயார்!
Published at : 08 Mar 2024 04:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion