மேலும் அறிய
Egg Chapathi : இந்த முட்டை சப்பாத்தியை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க..மறுக்காமல் சாப்பிடுவார்கள்!
Egg Chapathi : உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை தேடுகிறீர்களா..? கவலை வேண்டாம்..இந்த முட்டை சப்பாத்தியை செய்து கொடுங்கள்.

முட்டை சப்பாத்தி
1/6

சப்பாத்தி மாவு செய்ய : கோதுமை மாவு - 1 1/2 கப், உப்பு - 1/4 தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி, வெந்நீர். முட்டை கலவை செய்ய : முட்டை - 4, உப்பு - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, பூண்டு பொடியாக நறுக்கியது, இஞ்சி பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலை.
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு வெந்நீர் ஊற்றி மாவை நன்கு பிசைந்து 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
3/6

10 நிமிடங்கள் கழித்து சிறிய உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
4/6

அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
5/6

பின் தவாவை சூடு செய்து செய்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவும்.
6/6

அடுத்து தவாவில் செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி அதன் மேல் செய்த சப்பாத்தியை வைத்து லேசாக அழுத்தவும். அவ்வளவு தான் அசத்தலான முட்டை சப்பாத்தி தயார்.
Published at : 07 Mar 2024 03:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
நெல்லை
ஐபிஎல்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion