மேலும் அறிய
Paneer Cheese Balls Recipe : சுடசுட அசத்தல் ஸ்நாக்ஸ்..இன்றே செய்யுங்கள் பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபி..!
Paneer Cheese Balls Recipe : சில்லென்று இருக்கும் மாலை வேளையில் மொறுமொறுன்னு ஸ்நாக்ஸ் செய்யனுமா..? இந்த பன்னீர் சீஸ் பால்ஸ் ரெசிபியை ட்ரை செய்யுங்கள்..!

பன்னீர் சீஸ் பால்ஸ்
1/6

தேவையான பொருட்கள் : பன்னீர் - 200 கிராம், வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 விதை நீக்கி பொடியாக நறுக்கியது, கொத்தமல்லி இலை, உப்பு - 1/2 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி, கடலை மாவு - 2 மேசைக்கரண்டி, சோள மாவு - 1 மேசைக்கரண்டி, ப்ரோசஸ்டு சீஸ், பிரட் தூள், சோள மாவு - 3 தேக்கரண்டி, எண்ணெய்.
2/6

செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் கடலை மாவு போட்டு, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
3/6

செய்த பன்னீர் கலவையிலிருந்து சிறிய அளவு எடுத்து இதனுள் ஒரு சிறிய துண்டு சீஸ் வைத்து மூடி நான்கு உருண்டையாக உருட்டவும். ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவும் தண்ணீரும் கலந்து கரைத்து வைத்துக்கொள்ளவும்.
4/6

பன்னீர் பால்ஸை சோள மாவு கலவையில் முக்கி, பிறகு பிரட் தூளில் பிரட்டி, ஃப்ரீசரில் 10 நிமிடங்களுக்கு வைத்து எடுக்கவும்.
5/6

பின்பு ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, குறைந்த தீயில் சூடாக்கவும்.
6/6

எண்ணெய் சூடானதும், ஃப்ரீஸரில் உள்ள பன்னீர் பால்ஸை எண்ணெயில் போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான பன்னீர் சீஸ் பால்ஸ் தயார்.
Published at : 06 Dec 2023 10:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement