மேலும் அறிய
Sago Sarbath : வெயிலுக்கு ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. இப்படி செய்து அசத்துங்க!
Sago Sarbath : இந்த கோடை வெயிலுக்கு, சுவையான ஜவ்வரிசி சர்பத்தை வீட்டிலே செய்து பருகலாம்.

ஜவ்வரிசி சர்பத்
1/6

400 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் ஒரு பாக்கெட் ஜெல்லி கிரிஸ்டல் சேர்த்து கரைந்ததும் இந்த தண்ணீரை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு ட்ரேயில் ஊற்றி வைக்கவும்
2/6

30 நிமிடங்களுக்கு பின் ஜெல்லி செட் ஆகி இருக்கும். இதை உங்களுக்கு வேண்டிய அளவில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
3/6

ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து இதன் தண்ணீரை வடித்து விட்டு வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீ எடுத்து சூடாக்காவும். தண்ணீர் சூடானதும் ஜவ்வரிசியை தண்ணீரில் சேர்த்து வேகும் வரை கிளறி விடவும்.
4/6

ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்து ஒரு கிண்ணம் அல்லது பெளலில் ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் ஜவ்வரிசியை சேர்த்து கால் கப் அளவு சர்க்கரை, அரை ஸ்பூன் ரோஸ் சிரப் சேர்க்கவும்.
5/6

பின் தயாரித்து வைத்துள்ள ஜெல்லி துண்டுகளையும் இதனுடன் சேர்த்து கலந்து விட்டு ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறலாம்.
6/6

தேவைப்பட்டால் பாதம் அல்லது பிஸ்தா துகள்களை கொண்டு இந்த சர்பத்தை அலங்கரித்து பரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
Published at : 26 Apr 2024 03:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion