மேலும் அறிய
Advertisement

Paneer biryani: பனீர் பிரியாணி செம டேஸ்டா இருக்கனுமா? இந்த மாதிரி செய்து பாருங்க!
சுவையான பனீர் பிரியாணி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

பனீர் பிரியாணி
1/8

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். சூடானவுடன், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, சோம்பு, ஜாதி பத்திரி, ஏலக்காய், மராத்தி மற்றும் அன்னாசி மொக்கு, முந்திரி சேர்த்து வதக்க வேண்டும்.
2/8

இந்தப் பொருட்கள் வதங்கியதும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
3/8

அடுத்து அதில் இஞ்சி-பூண்டு பேஸ்ட், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
4/8

அரிசியில், 2 பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின்னர் அதை நன்றாக கலக்கி பாத்திரத்தை மூடி போட்டு கொதிக்கவிட வேண்டும்.
5/8

அது நன்றாக கொதித்தவுடன், ஊற வைத்த பிரியாணி அரிசியை சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து விட்டு மூடி வைக்கவேண்டும்.
6/8

15 நிமிடங்கள் வெந்த பின்னர், மூடியைத் திறந்தால் தண்ணீர் சுண்டி, வெள்ளை பிரியாணி வெந்திருக்கும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து, பிரியாணியில் சேர்த்து கிளறி விட வேண்டும். ( இதை முன்னதாக தயாரித்து வைத்தும் சேர்க்கலாம்.)
7/8

வீட்டிலுள்ள தோசைக்கல்லை மிதமான தீயில் அடுப்பில் வைத்து சூடாக்கவேண்டும். அதன் மீது பிரியாணியோடு பாத்திரத்தை வைக்கவேண்டும்.
8/8

பிரியாணி பாத்திரத்தை மூடி விட்டு, அதன் மீது அகலமான பாத்திரத்தில் கொதிக்கும் வெந்நீர் வைத்து அதையும் மூடி அடுப்பை சிம்மில் வைக்கவும். இதை 10 நிமிடம் வைத்தால் போதும். பிரியாணி நன்றாக தம் ஏறியிருக்கும். இதை ஜாம், தயிர் பச்சடி கறிக்குழம்பு சுக்கா, தால்ஸா, தயிர்பச்சடி போன்றவற்றுடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
Published at : 14 Dec 2023 07:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
விழுப்புரம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion