மேலும் அறிய
Essential Oil Sleep : நல்ல தூக்கம் இல்லையா? நறுமண எண்ணெயும் இவ்வளவு யூஸ் ஆகுமா?
தளர்வை ஊக்குவிக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஒரு நல்ல இரவு தூக்கத்தை பெறவும் பல அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

லாவண்டர் பூ எண்ணெய்
1/5

இயற்கை எண்ணெய்கள் பல நூற்றாண்டுகளாக தூக்கம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வாக பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு ஒரு நல்ல தூக்கம் அவசியம்,
2/5

லாவெண்டர் எண்ணெய் என்பது நன்கு அறியப்பட்ட இயற்கை எண்ணெய், இது கவலையைத் தணிக்கும் என நம்பப்படுகிறது. இது பதட்டத்தை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல், தூக்கப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையிலான விளைவையும் கொண்டுள்ளது.
3/5

சூடான குளியல் நீரில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெயைச் சேர்க்கலாம் அல்லது ஜோஜோபா, பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் கலந்து தடவி பின்னர் குளிக்கலாம்.
4/5

இயற்கை எண்ணெய் பலவகையிலான தீர்வாகும். இது தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் உட்பட பல எண்ணிக்கையிலான மக்களுக்கு இந்த எண்ணெய் பயனளிக்கும். அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய இந்த பெர்கமோட் எண்ணெய் வீக்கத்தைக் குறைக்கவும் உடலைத் தாக்கும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும் உதவும்.
5/5

ரோஜா இதழ்களிலிருந்து பெறப்பட்ட இந்த எண்ணெய் ரோஜாக்களின் அதே உற்சாகமூட்டும் வாசனையைக் கொண்டது. கடந்தகால ஆய்வுகளின்படி, அடிவயிற்றில் ரோஜா எண்ணெயை லேசாக மசாஜ் செய்து அடிக்கடிப் பயன்படுத்துவதன் விளைவாக மாதவிடாய் அசௌகரியம் குறைந்து பதட்டத்தை தனித்து இனிமையானதொரு உணர்வை ந்மக்குத் தருகிறது.
Published at : 08 Feb 2024 06:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement