மேலும் அறிய
Skin Care:முகம் பொலிவுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?இதோ மேஜிக் எண்ணெய் ரெசிபி!
சரும பராமரிப்பிற்கு உதவும் எண்ணெய் குறித்த நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

சரும பராமரிப்பு
1/5

சரும பராமரிப்பு என்பது எல்லா காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. அதை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரட் எண்ணெய் சருமத்திற்கு செய்யும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.
2/5

கேரட்டுகளின் இரண்டு முனைகளையும் நறுக்கி விட்டு நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் அவற்றை பருத்தித் துணியைக் கொண்டு ஈரமில்லாமல் துடைக்க வும். பின்பு எல்லா கேரட்டுகளையும் துருவிக் கொள்ளவும். ஒரு அகன்ற வாணலியில் கேரட் துருவலைக் கொட்டி அத்துடன் சம அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கலக்கவும்.
3/5

குறைவான தீயில் அவ்வப்போது இந்தக் கலவையை கிளறி விடவும். 15 நிமிடங்களில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது அடுப்பை அணைத்து விட்டு வாணலியை இறக்கி வைக்கவும். இந்தக் கலவை நன்றாக ஆறியபிறகு வடிகட்ட வும். இப்போது பொன்னிறமான கேரட் எண்ணெய் தயார். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
4/5

இரண்டுதுளி கேரட் எண்ணெயை முகம் முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும். முகம் பொலிவுறும்.கழுத்து, அக்குள், தொடை, இடுக்கு போன்ற பகுதிகளில் சிலருக்குநாள்பட்ட கருமை படர்ந்து இருக்கும். இவர்கள் அந்த இடத்தில் கேரட் எண் ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.
5/5

கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டாகரோட் டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கேரட் எண்ணெயை குளிர்சாத னப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.
Published at : 03 Oct 2024 11:32 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement