மேலும் அறிய
Double Ka Meetha Recipe : ப்ரெட் அல்வாவை மிஞ்சும் ஹைதராபாத் டபுள் கா மீதா.. செய்முறை விளக்கம் இதோ!
Double Ka Meetha Recipe : இந்தாண்டின் ரம்ஜான் மாதத்தில், இந்த சுவையான டபுள் கா மீதா ரெசிபியை செய்து மகிழுங்கள்.

டபுள் கா மீதா
1/6

பெரும்பாலான கல்யாண வீடுகளில் பரிமாரப்படும் பிரியாணி இலையில் கண்டிப்பாக பிரெட் அல்வா இருக்கும். இதன் சுவைக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹைதராபாத் ஃபேமஸ் டபுள் கா மீட்டாவை எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
2/6

தேவையான பொருட்கள் : இனிப்பு பிரட், பால் - 500 மிலி, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, இனிப்பில்லாத கோவா - 100 கிராம், எண்ணெய், நெய் - 2 டீஸ்பூன் பாதாம், பிஸ்டா & முந்திரி உலர்ந்த திராட்சை, தண்ணீர் - 1 1/2 கப், சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
3/6

செய்முறை : முதலில் இனிப்பு பிரட் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும் வெட்டிய பிரட் துண்டுகளை ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து பொறித்து வைத்துக்கொள்ளவும்
4/6

அடுத்து ஒரு பாத்திரத்தில் பால், குங்குமப்பூ, இனிப்பில்லாத கோவா சேர்த்து கரைத்து வைக்கவும். இந்த பாலை பொறித்து வைத்த பிரட் துண்டுகளில் சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
5/6

அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி கொள்ளவும் ஊறிய பிரட் துண்டுகளை சர்க்கரை பாகில் சேர்த்து கிளறவும்.
6/6

இறுதியாக இதன் மேல் நெய் மற்றும் பொறித்த பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் உலர்ந்த திராச்சை சேர்த்து பரிமாறவும் இனிப்பான மற்றும் எளிமையான டபுள் கா மீட்டா தயார்
Published at : 11 Mar 2024 11:37 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement