புதுச்சேரி வாக்காளர் பட்டியல்: 85,531 பேர் நீக்கம்! உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
Puducherry SIR Voter List: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டடுள்ளது.

Puducherry SIR Voter List: புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, புதுச்சேரி மாவட்டத்தில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 775 வாக்காளர்கள் உள்ளதாகவும், 85,531 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது.,
புதுச்சேரி வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 28.102025 முதல் 14.02.2026 வரை வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்த வாக்காளர்கள், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள விலாசத்தில் இல்லாத வாக்காளர்களின் பெயர்களை நீக்கம் செய்து புதுச்சேரியில் பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயார் செய்வதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கமாகும்.
இந்த சிறப்பு தீவிர திருத்தபணி தொடங்குவதற்கு முன்னதாக புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 8,51,775 வாக்காளர்கள் (ஆண் 394,771; பெண் 4.51,869, மூன்றாம் பாலினத்தவர் 135) இருந்தனர். இந்த சிறப்பு தீவிர திருத்தப்ப பணியின் ஒரு பகுதியாக கடந்த 04 11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Forms) வாக்காளர்களுக்கு விநியோகம் செய்தனர். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து கடந்த 11.12.2025 வரை திரும்பப் பெற்றனர்.
வாக்காளர்களின் வசதிக்காக பொது விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்ததந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இப்பணியினை விரைந்து முடிப்பதற்காக NSS மற்றும் NCC இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான சந்தேகங்களை போக்கிக்கொள்வதற்கும், 2002 வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களுடைய விவரங்களை தெரித்து கொள்வதற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. மேலும் வேறு மாநிலங்களிலிருந்து பலம் பெயர்ந்த வாக்காளர்களின் சந்தேகங்களை போக்குவதற்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தனியாக உதவி மையம் அமைக்கப்பட்டது. 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்
புதுச்சேரி மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் (8,51,775) எண்ணிக்கையில் 6,51,775 வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு 7,66,244 வாக்காளர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. 85,531 வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் திரும்பப் பெறப்படவில்லை. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கள ஆய்வின்போது சில வாக்காளர்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாலும், சிவர் வேறு இடங்களுக்கு குடியபெயர்ந்த காரணத்தினாலும், மேலும், சில வாக்காளர்கள் மரணம் அடைந்த காரணத்தினாலும் அவ்வாக்களர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே, மரணம் அடைந்த வாக்காளர்கள், குடிபெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள முகவரியில் இல்லாத வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய ASD (Absent/Shifted /Dead) பட்டியல் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கும் (BLA) இப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதள முகவரியில் https://puducherry-dt.gov.in TT SIR-BLO&BLA-MOM" இப்பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. (Link) இதன்படி, புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் மரணம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. அடைந்தவிட்டதாகவும், 45,312
இந்த சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மற்றும் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட மரணம் அடைந்த வாக்காளர்கள், வேறு இடத்திற்கு குடி பெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் வீடுகளில் இவ்வாத வாக்காளர்களை கருத்தில் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திரு குலோத்துங்கள் அ. இஆப அவர்கள் 16.12.2025 அன்று காலை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் கலந்தாய்வு கூடத்தில் மடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கினார். இதன்படி புதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 7,66,244 வாக்காளர்கள் [ஆண் - 3,50,396 பெண் 4,05,728; மூன்றாம் பாலினத்தவர் 120) உள்ளனர்.
இணையதளத்திவ பொதுமக்களின் (தொகுதிவாரியான வாக்காளர் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.) இந்த வாக்காளர் விவரங்களை புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலக இணையதனத்தில் பொதுமக்கள் காணலாம். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இச்சிறப்பு தீவிர திருத்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) அவ்வப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளால் கெளரவிக்கப்பட்டனர். மேலும் NSS மற்றும் NCC தன்னார்வலர்களை இப்பணியில் ஈடுபடுத்த உதவிய கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், 16.12.2025 முதல் 15.01.2026 வரையிலான காலகட்டத்தில் உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இச்சமயத்தில், வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள்பெயர் இடம் பெறாத வாக்காளர்கள் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிமை கோரலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடவராக இருப்பின் வருகின்ற 14.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர்களை சேர்க்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,
ஆகவே, பொதுமக்கள் அச்சம் அடையாமல் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி புதுச்சேரியில் பிழையில்லை வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு உதுவுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், அலுவலகத்தின் இந்நிகழ்ச்சியின்போது இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் இதுவரை சிறப்பாக பணியாற்றிய வாக்காளர் பதிவு அதிகாரகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், இதர தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அரசியல் கட்சிகள், வாக்குச்சவடி நிலை முகவர்கள் BLA) மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.





















