மேலும் அறிய
Rajasthani Malai Pyaaz Sabzi: ராஜஸ்தானி மலாய் பியாஸ் சப்ஜி - ரெசிபி!

ராஜஸ்தானி மலாய் பியாஸ் சப்ஜி
1/6

இந்த சப்ஜியை செய்ய முதலில் சின்ன வெங்காயத்தை சிறிதளவு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பாத்திரத்தில் குறைந்த தீயில் வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெங்காயத்தில் சிறிதளவு எண்ணெயை தெளித்து, உப்பும் சேர்க்க வேண்டும்.
2/6

.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் சிறிது நெய்யை சூடாக்கி, சீரகம், வளைகுடா இலை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்க்க வேண்டும்
3/6

அவற்றை நன்றாக வதக்கி, பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
4/6

இவற்றை நன்கு கலந்து தண்ணீர் மற்றும் தக்காளி கூழ் சேர்க்க வேண்டும். கடாயை ஒரு மூடியால் மூடி, சுமார் 7-8 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். ஆறியதும், ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து மீண்டும் சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும்.
5/6

அடுத்து, வறுத்த வெங்காயத்தை சேர்த்து, அனைத்தையும் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக, சிறிது கிரீம் மற்றும் கசூரி மேத்தி மற்றும் ஃப்ரெஷ் கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
6/6

ராஜஸ்தானி மலாய் பியாஸ் சப்ஜி தயார். இது ரொட்டி,நாண் ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
Published at : 01 Nov 2023 04:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement