மேலும் அறிய
Menstruation Hygiene Day : இன்று மாதவிடாய் சுகாதார தினம்.. இந்த நாளை குறித்த சில தகவல்களை இங்கு காண்போம்!
மாதவிடாய் சுகாதார தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

மாதவிடாய் சுகாதார தினம்
1/7

மாதவிடாய் சுகாதார நாள் ஒவ்வொரு ஆண்டும் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
2/7

மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதற்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
3/7

மாதவிடாய் சுகாதார தினம் 2013 இல் வாஷ் யுனைடெட் - ஜெர்மன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. முதல் மாதவிடாய் சுகாதார தினம் 2014 இல் கொண்டாடப்பட்டது.
4/7

சமூகத்தின் மூடநம்பிக்கை மற்றும் போதிய விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால் பல வளரும் நாடுகளில் இளம் பெண்கள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அறியாமை இருந்து வருகிறது.
5/7

பல சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு சுத்தமான நீர் மற்றும் சானிட்டரி நாப்கின் கிடைக்காததால் அவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளியில் இருந்து பலரும் பாதியில் நிற்கும் நிலை ஏற்படுகிறது.
6/7

அருணாசலம் முருகானந்தம், இந்தியாவில் பெண்களுக்கான மலிவான சானிட்டரி பேட்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
7/7

2030 ஆம் ஆண்டில், உலகெங்கிலும் உள்ள பெண்கள் மாதவிடாய் சுகாதாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதை மாதவிடாய் சுகாதார தினம் உறுதிசெய்கிறது.
Published at : 28 May 2023 04:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion