மேலும் அறிய
Ribbon Pakoda recipe : இந்த கிருஷ்ண ஜெயந்திக்கு ரிப்பன் பக்கோடாவை வீட்டிலே செய்து அசத்தலாம் வாங்க..
Ribbon Pakoda recipe : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரிப்பன் பக்கோடாவின் செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.

ரிப்பன் பக்கோடா
1/6

கிருஷ்ண ஜெயந்திக்கு இனிப்பு வகைகள் மட்டுமல்லாமல் முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களை செய்வது வழக்கம். அதே பலகார வரிசையில் இருக்கும் ரிப்பன் பக்கோடாவை வீட்டில் எப்படி செய்வது என பார்க்கலாம்.
2/6

தேவையான பொருட்கள் : பொட்டு கடலை - 1/2 கப், அரிசி மாவு - 1 1/2 கப், கடலை மாவு - 1/2 கப், உப்பு - 1 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
3/6

தேவையான பொருட்கள் : பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி, தண்ணீர், எண்ணெய் - பொரிப்பதற்கு
4/6

செய்முறை : மிக்ஸி ஜாரில் பொட்டு கடலையை சேர்த்து நன்கு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.பின்பு சல்லடையில் அரைத்த பொட்டு கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து சலித்து கொள்ளவும். பிறகு உருக்கிய வெண்ணெய் சேர்த்து கலந்துவிடவும்.
5/6

பின்பு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.பிறகு முறுக்கு அச்சில் ரிப்பன் பக்கோடா அச்சை வைக்கவும். பின்பு முறுக்கு அச்சின் உள் பக்கம் எண்ணெய் தடவவும்.பிறகு தயார் செய்த மாவை அச்சில் சேர்க்கவும்.
6/6

கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அச்சில் இருந்து மாவை எண்ணெயில் பிழிந்துவிடவும். பிறகு பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து ஆறவிடவும். அவ்வளவுதான் ரிப்பன் பக்கோடா தயார்!
Published at : 05 Sep 2023 03:38 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement