மேலும் அறிய
Guava Chutney Recipe : என்னது கொய்யாவில் சட்னி செய்யலாமா? இது தெரியாம போச்சே!
Guava Chutney Recipe : கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் புளிப்பு கலந்த சூப்பரான கொய்யா சட்னியின் செய்முறை விளக்கத்தை இங்கு காணலாம்.
கொய்யா சட்னி
1/6

இந்தியாவில் பலவகையான சட்னி வகைகள் உள்ளன. அவற்றை இட்லி, தோசை வகைகளுக்கு தொட்டு சாப்பிடுவோம். ஒரு சிலர், தேங்காய் சட்னியை பரோட்டாவுடன் தொட்டு சாப்பிடுவார்கள்.
2/6

இந்த பதிவில், சுலபமாக செய்யக்கூடிய வித்தியாசமான சட்னி வகையின் செய்முறையை பார்க்கவுள்ளோம். ஆம், பலரது ஃபேவரட்டாக இருக்கும் கொய்யாவை வைத்து சூப்பரான சட்னி வகை பற்றி பார்க்கலாம் வாங்க...
3/6

செங்காயாக இருக்கும் கொய்யா - 1, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சிறிய இஞ்சி துண்டு - பொடியாக நறுக்கியது, சீரகம் - 1 டீஸ்பூன், கருப்பு உப்பு - தேவையான அளவு, சால்ட் உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - 1 கட்டு, எலுமிச்சை - 1, சிறு துண்டு வெல்லம், தண்ணீர்
4/6

செய்முறை : மிக்சர் ஜாரில் நறுக்கிய கொய்யா, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கருப்பு உப்பு, சால்ட் உப்பு சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
5/6

அதன் பின்னர், அதே ஜாரில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
6/6

அவ்வளவுதான் சுவையான கொய்யா சட்னி தயார். இதை காக்ரா, ரொட்டி, பராத்தா வகைகளுக்கு தொட்டு சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.
Published at : 31 Jan 2024 12:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
விளையாட்டு
அரசியல்
Advertisement
Advertisement






















