மேலும் அறிய
Dates Cake Recipe : மைதா வேண்டாம்..ஓவன் வேண்டாம்.. எளிதான பேரிச்சம்பழ கேக்கை ஈசியாக செய்யலாம்!
Dates Cake Recipe : கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், ஆரோக்கியமான பேரிச்சம்பழ கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.

பேரிச்சம்பழம் கேக்
1/4

தேவையான பொருட்கள் : 25 பேரிச்சம்பழம், ஒன்றரை கப் சூடான பால், ஒன்றரை கப் காய்கறி எண்ணெய், 1 கப் கோதுமை மாவு, அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, கொஞ்சம் வால்நட்ஸ்
2/4

முதலில், விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை சூடான பாலில் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில், கோதுமை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும்.
3/4

ஊறவைத்த பேரிச்சம்பழத்தை பேஸ்ட் போன்று அரைத்து கொள்ள வேண்டும். இதையும் காய்கறி எண்ணெயையும் மாவு கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும்
4/4

இந்த கலவையை பேக்கிங் டின்னில் ஊற்றி மேலே நறுக்கிய வால்நட்டை தூவ வேண்டும். இதை 180 டிகிரியில் 50 நிமிடங்களுக்கு ஓவனில் வைத்து எடுக்க வேண்டும். அவன் இல்லாதவர்கள், குக்கரில் மண் கொட்டி அதற்கு மேல் ஸ்டாண்ட் வைத்து, அதன் பின் கேக் டின்னை வைத்து மூடி பேக் செய்ய வேண்டும்..அவ்வளவுதான் ஆரோக்கியமான பேரிச்சம்பழ கேக் ரெடியாகிவிடும்
Published at : 09 Dec 2023 04:55 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement