மேலும் அறிய
Kanguva Last Day : "இது முடிவு அல்ல தொடக்கம்..." கங்குவா படப்பிடிப்பை முடித்த சூர்யா நெகிழ்ச்சி!
Kanguva last day : 'கங்குவா' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த நடிகர் சூர்யா, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

கங்குவா ஸ்டில்ஸ்
1/6

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் 'கங்குவா'. இது நடிகர் சூர்யாவின் 42வது திரைப்படம்.
2/6

ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
3/6

நடிகர் சூர்யா இப்படத்தில் ஆறு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார்.
4/6

கடந்த 2021ம் ஆண்டு 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
5/6

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது என்பதை நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பேஜ் மூலம் தெரிவித்துள்ளார்.
6/6

"கடைசி நாள் படப்பிடிப்பு இன்று. படக்குழு முழுவதும் பாசிட்டிவாக இருந்தது. இது ஒன்றின் முடிவாக இருக்கலாம் ஆனால் பலவற்றின் தொடக்கம். இத்தனை அற்புதமான நினைவுகளை கொடுத்த இயக்குநர் சிவாவுக்கு எனது நன்றிகள். கங்குவா திரைப்படம் மிகவும் பிரம்மாண்டம் மற்றும் ஸ்பெஷல். இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க உங்களை போலவே ஆர்வமாக இருக்கிறேன்" என குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார் சூர்யா.
Published at : 11 Jan 2024 01:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
தேர்தல் 2025
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion