மேலும் அறிய
World Poetry Day: ‘அடடே ஆச்சர்யகுறி..’கவிதை தினத்தை முன்னிட்டு கோலிவுட்டின் மொக்கை கவிதைகள் இங்கே!
World Poetry Day: கோலிவுட்டில் வெளியாகியுள்ள பல படங்களில், மொக்கை கவிதைகள் கூறப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
கோலிவுட்டின் மொக்கை கவிதை பேசும் காட்சிகள்
1/7

“மரத்துல இருக்குது காய்..தூங்க தேவ பாய்..நீ மட்டும் ஓகே சொன்னா..இந்த கார்த்தி உன் காலடி நாய் செல்வி..உன் காலடி நாய்..” சென்னை 28 படத்தில் நடிகர் சிவா, குழந்தையிடம் சொல்லும் மொக்கை கவிதை இது
2/7

“இரு இதயம் ஒரு இதயம் ஆனதே..அந்த ஒரு இதயம் நொறுங்கி போனதே…” ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் சித்ரா தேவி பிரியாவின் மரண மொக்கை கவிதை இது
3/7

“பட்டப்பகலிலே..பங்குனி வெயிலிலே..என்னை பார்த்து சிரிக்கும் நிலா..”கல்யாணி டீச்சரை பார்த்ததும் பரவசத்தில் ஹீரோ போஸ்பாண்டி சொல்லும் கவிதை இது
4/7

“பெண்ணே எனக்கு உன் மேல ஆச..அத நான் எப்படி உன் கிட்ட பேச..எக்ஸ்ட்ராவா மொளைக்கிது மீச..நம்ப கல்யாணத்தன்னிக்கே பூச..” திருச்சிற்றம்பலம் படத்தில் பழம் தனது காதலை இந்த கவிதை மூலமாகத்தான் தெரிவிப்பார்
5/7

“நீயும் நானும் ஒன்னு..காந்தி பொறந்த மன்னு..டீ கடையில நின்னு..தின்னுப்பாரு பன்னு..” அழகிய தமிழ்மகன் படத்தில் குழந்தைக்காக ஹீரோ கூறும் கவிதை இது
6/7

“தேன் மொழி கனிமோழி இளமொழி..” கோமாளி படத்தில் மும்மொழிகள் யாவை என கேட்கப்படும் கேள்விக்கு ஜெயம் ரவி ஜோக்காக கூறும் பதில் இது
7/7

“ஒரு ஸ்வீட் ஸ்டாலே பணியாரம் சாப்பிடுகிறதே..” உன்னருகே நான் இருந்தால் படத்தில் ரம்பாவை பார்த்து பார்த்திபன் பேசும் டைலாக் இது
Published at : 21 Mar 2023 02:43 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















