மேலும் அறிய
Vijay Deverakonda : வாய் விட்டு மாட்டிக்கொண்ட விஜய் தேவரகொண்டா.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்!
அடுத்தடுத்து தோல்வி கொடுத்த பிறகு ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளதாக நடிகர் விஜய் தேவரகொண்டா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தேவரகொண்டா
1/7

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.
2/7

இப்படம் தமிழகத்தில் மட்டும் 1200 திரையரங்குகளிலும் உலகளவில் சுமார் 7000 திரையரங்குகளிலும் வெளியானது.
3/7

முதல் நாள் ஓப்பனிங் மட்டுமே ரூ.20 கோடியை எட்டிய நிலையில் உலகளவில் ரூ.375.40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டது.
4/7

தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவின் குஷி பட ப்ரோமோஷன் கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இதில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்
5/7

அப்போது அவர் பேசுகையில், “தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த 6 படங்கள் தோல்வி தான். ஆனால் அவர் ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அப்படம் ரூ.500 கோடி வசூலித்துள்ளது” என்று கூறினார்.
6/7

“தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கும் கடைசி 6,7 படங்கள் தோல்விதான் ஆனால் அவர் சினிமாவில் புரட்சி செய்தவர் அவரால் கிட்டதட்ட ஆயிரம் பேர் சினிமா உலகில் வந்துள்ளனர்” - விஜய் தேவரகொண்டா
7/7

“என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தாலும் இனி வரும் படங்களில் ஹிட் கொடுப்பேன்” என்றார் விஜய் தேவரகொண்டா. இவரின் பேச்சு ரஜினி மற்றும் சீரஞ்சிவி ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 22 Aug 2023 03:55 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
உலகம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion