இனி இன்ஸ்டாகிராமுக்கு நோ! சோஷியல் மீடியாவால் கைதான ஜோம்பி ஏஞ்சலினாவின் சோக பதிவு!
19 வயது நிரம்பிய இப்பெண் 50 பிரத்யேக அறுவை சிகிச்சைகள் செய்து தன்னை இந்தத் தோற்றத்தில் மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுக்கிறது.
2019ஆம் ஆண்டின் இறுதியில் இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் நடிகை ஏஞ்சலினா ஜோலியை ஜாம்பி போல் சித்தரித்து உருக்குலைந்த முகத்துடன் அச்சுறுத்தும் செல்ஃபிகளைப் பகிர்ந்து அதிர்வலையை ஏற்படுத்தினார்.
இணையத்தில் சஹர் தாபர் என அழைக்கப்படும் ஃபதேமே கிஷ்வந்த் எனும் இந்தப் பெண் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். 19 வயது நிரம்பிய இப்பெண் 50 பிரத்யேக அறுவை சிகிச்சைகள் செய்து தன்னை இந்தத் தோற்றத்தில் மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுக்கிறது.
இந்நிலையில், சமூக வலைதள பிரபலமான இப்பெண் இஸ்லாமிய குடியரசை அவமதித்ததாகவும், கலாச்சாரத்தைக் கெடுக்கும் வகையில் புகைப்படம் பகிர்ந்ததாகவும் கூறி அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது.
View this post on Instagram
பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளன, ஆனால் இன்ஸ்டாகிராம், டிக் டொக் செயலிகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறுகிய காலத்தில் அதிக ஃபாலோயர்களைப் பெற்ற இந்த பெண், தன் தன் சமூக ஊடக நடவடிக்கைகளுக்காக முன்னதாக கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வந்தார்.
இதன் பிறகு ஃபதேமே கிஷ்வந்த் குறித்து இணையத்தில் எந்தத் தகவல்களும் வராத நிலையில், 14 மாதங்கள் சிறையில் இருந்து திரும்பிய இப்பெண் குறித்து முன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ,
View this post on Instagram
இனி தன் மொபைலில் எக்காரணம் கொண்டும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தப்போவதில்லை என்றும், தனது பக்கம் அப்படியே இருக்கட்டும் என்றும் அப்பெண் கூறியதாக அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.