Afghanistan: ஆப்கானிஸ்தானில் கடுமையாக சரிந்த பெண்களுக்கான வேலைவாய்ப்பு - தலிபான்கள் ஆட்சியில் கடும் அவதி
தலிபான்கள் ஆப்கான் நாட்டை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலைவாய்ப்பு 25% குறைந்துள்ளது.
தலிபான்கள் ஆப்கான் நாட்டை கைப்பற்றிய பிறகு ஆப்கானிஸ்தானில் பெண்களின் வேலைவாய்ப்பு 25% குறைந்துள்ளது.
வீழ்ச்சியில் பெண்களின் வளர்ச்சி:
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) மதிப்பீட்டின்படி, பெண்கள் வேலைக்கு செல்லவும், படிக்கவும் பல கட்டுப்பாடுகளால் சதவீதத்தில் வீழ்ச்சி அதிகரித்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டு வரை பெண்களுக்கான வேலைவாய்ப்பில் 25% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், ஆண்களுக்கு 7% வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் ILO தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதால், ஆகஸ்ட் 2021 இல் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றினர். "பெண்கள் மற்றும் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் அவர்களின் கல்வி மற்றும் தொழிலாளர் சந்தை வாய்ப்புகளுக்கு எதிராக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன" என்று ILO வின் ஆப்கானிஸ்தானின் மூத்த ஒருங்கிணைப்பாளர் ராமின் பெஹ்சாத் கூறியுள்ளார். தலிபான் ஆப்கானை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் உயர்நிலை படிப்பை பயில தடை விதித்தனர், பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பட்டப்படிப்பை பெற தடஒ விதித்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலை செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் தலிபான்கள் நாட்டை கைப்பற்றியதிலிருந்து வெளிநாட்டு அரசாங்கம் வளர்ச்சிகான நிதிகளை நிறுத்தி மத்திய வங்கியின் சொத்துக்களை முடக்கியுள்ளது. ILO தரவுகளின்படி GDP 2021 மற்றும் 2022 இல் 30 முதல் 35 சதவிகிதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பணப்புழக்க நெருக்கடியைத் தணிக்க சர்வதேச சமூகம் அதன் சொத்துக்களை முடக்கியதை மீண்டும் புழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று தலிபான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார தன்னிறைவை உருவாக்க வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை:
15 மற்றும் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை 25% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மொத்த வேலைவாய்ப்பு சற்று அதிகரித்தது. ஆனால் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது என ILO தெரிவித்துள்ளது. "சில பெண்கள் வேலையை விட்டு விவசாயம் அல்லது சுயதொழில் சார்ந்து சென்றுள்ளனர், இதனால் பெண் மேலும் வேலைவாய்ப்பை இழக்க நேரிடாது" என்று ILO அறிக்கை கூறுகிறது.
2021ஆம் ஆண்டு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். அப்போது முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் மீது ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கட்டயம் ஹிஜாப் அணிய வேண்டும், 45 மைல்கள் மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் துணையுடன் வரவேண்டும் என பல்வேறு கட்டுப்படுகளை விதித்துள்ளது. பலரும் கடந்த ஆட்சியை விட இது மிகவும் மோசமாக உள்ளது என கூறியுள்ளனர்.