Viral Video: கொள்ளையடிக்க வந்தவர்களிடம் அதிரடி காட்டிய பெண்.. சில்லறை சிதறவிடும் நெட்டிசன்கள்..
பேக்கரியைச் சேர்ந்த பெண் ஒருவர், திருட வந்த நபரிடமிருந்து துப்புரவு செய்யும் துணியைக்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
புலியை முறத்தால் அடித்து துரத்திய தமிழ்ப்பெண் போல், கடைக்குத் திருட வந்த அடையாளம் தெரியாத நபரை வெறும் துணியால் அடித்து துரத்திய பெண் இணையத்தில் வைரலாகி உள்ளார்.
வல்லவனுக்கு க்ளீனிங் துணியும் ஆயுதம்
துருக்கியில் பேக்கரியைச் சேர்ந்த பெண் ஒருவர், திருட வந்த நபரிடமிருந்து துப்புரவு செய்யும் துணியைக்கொண்டு தன்னை தற்காத்துக் கொள்ளும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தன்சு யெஜென் என்ற பயனர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
துணியால் கடையை சுத்தம் செய்து கொண்டிருந்த அப்பெண், கருப்பு நிற ஹூடி அணிந்தபடி கத்தியுடன் கடைக்குள் நுழைந்த கொள்ளையனை விரட்டியடித்துள்ளார். பணம் வைத்திருக்கும் கவுண்டருக்கு நேராக வந்த கொள்ளையன் அப்பெண்ணை தாக்க முற்படுகையில், அந்தப் பெண், வெறும் துப்புரவுத் துணி மற்றும் கையில் இருந்த துடைக்கும் மருந்தைக் கொண்டு திருடனைத் தாக்கியுள்ளார்.
Latife Peker, a turkish baker in the Netherlands, chased the thief, using a cleaning cloth in self-defense; don't underestimate the power of cleaning cloth👏 pic.twitter.com/4togC4JH5M
— Tansu YEĞEN (@TansuYegen) July 28, 2022
இதனையத்து பின் வாங்கி அந்த அடையாளம் தெரியாத நபர் கடையை விட்டு தப்பியோடுகிறார். இந்தக் காட்சிகள் ட்விட்டரில் நேற்று (ஜூலை.29) பகிரப்பட்ட நிலையில், 1.3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் 3,000க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், "துருக்கி பேக்கரி வாழ்க" என்றும், "தைரியமான பெண்மணி" என்றும் அப்பெண்ணை ட்விட்டர் பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.
1 கிமீ ஓடி, திருடனை துரத்திப் பிடித்த போலிஸ்
சமீபத்தில் கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஒரு பெண்ணின் பணப்பையுடன் தப்பியோடிய திருடனை போக்குவரத்து காவல் அதிகாரி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று துரத்திப் பிடித்த சம்பவம் வைரலானது.
பரபரப்பான சூரஜ்பூர் ரவுண்டானாவில் காத்திருந்த அப்பெண்ணின் பணப்பையை கொள்ளையடிக்க வந்த நபர் திருடிச் சென்ற நிலையில், அப்பெண் உடனே குரல் எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து ஆஷிஷ் குமார் எனும் காவலர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை துரத்திப் பிடித்தார். இந்தக் காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
உலகை மிரள வைத்த இலங்கை போராட்டம்...முடிவுக்கு கொண்டு வர துடிக்கும் ஆளும் வர்க்கம்...பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்