Watch Video : அழகு விரல்கள்...அப்பாவிக் கண்கள்! பூக்களுடன் காட்டு வெள்ளெலி கொடுத்த க்யூட் போஸ்!
அணில்கள், ஆந்தைகள், வெள்ளெலிகள், முயல்கள் என கண்களுக்கு குட்டியாக க்யூட்டாகப் புலப்படும் எதுவும் அதன் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை தனது கேமிரா வழியாக புகைப்படம் எடுப்பவர்
பிரபல புகைப்படக்காரர் ஜூலியன் ராட்டை பெயரளவில் தெரியாவிட்டாலும் அவரின் புகைப்படங்கள் வழியாக இங்கு பலருக்குத் தெரிந்திருக்கும். பூக்களை முகர்ந்துபார்க்கும் வெள்ளெலிகள் அழகு பாவனைகளை புகைப்படங்களாக்கிய போட்டோக்களுக்குச் சொந்தக்காரர். அணில்கள், ஆந்தைகள், ஹாம்ஸ்டர்கள், முயல்கள் என கண்களுக்கு குட்டியாக க்யூட்டாகப் புலப்படும் எதுவும் அதன் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை தனது கேமிரா வழியாக புகைப்படம் எடுப்பவர்.
View this post on Instagram
டெய்ஸி பூக்களை தொழுகை செய்வது போல ஆழ்ந்து முகர்ந்து பார்க்கும் அணில்களை இவர் புகைப்படம் எடுத்தது எக்கச்சக்க ஹிட்.
இந்த வரிசையில் தற்போது அவர் குண்டுகுண்டுக் கண்களுடன் ’கொஷ்மொஷ்க் கொழுக்மொழுக்’ என இருக்கும் காட்டு வெள்ளெலி ஒன்றை அதன் வாழ்விடத்துக்கே சென்று காட்சிப்படுத்தியுள்ளார்.செடியை ஆர்வமாக விழுங்கவரும் வெள்ளெலி தன்னை கேமிரா பார்ப்பதைப் பார்த்ததும் ஒருநிமிடம் திகைக்கிறது.பின்னர் அங்கிருந்து பின்னங்கால்கள் தெறிக்க ஓட்டம் எடுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஹிட்டாகி வருகிறது. இந்த வீடியோவைக் கண்ட பலர் பாராட்டுகளைக் குவித்தபடி வருகின்றனர்.அந்த வீடியோ உங்களுக்காக...
View this post on Instagram