North Korea : கொரோனா காலத்திஸ் வடகொரியா செய்த வேலை.. வெளியான செயற்கைக்கோள் புகைப்படத்தால் அதிர்ச்சி..!
கொரோனாவால் உலகமே நிலைகுலைந்த சமயத்தில் வடகொரியா ஒரு மிக பெரிய வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
வடகொரியாவை சுற்றி பல்வேறு மர்மங்கள் தொடர்ந்து வருகிறது. வினோதமான உத்தரவுகளை பிறப்பித்து மக்களை குழுப்புவது முதல் கடுமையான விதிகளை அமல்படுத்தி அவர்களை துன்புறுத்துவது வரை அந்நாடு குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
வடகொரியாவை சுற்றும் மர்மங்கள்:
கொரோனாவால் உலகமே நிலைகுலைந்த சமயத்தில் வடகொரியா ஒரு மிக பெரிய வேலையை செய்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில், ரஷியா, சீன நாடுகளுடனான எல்லை பகுதிகளை மூடுவதற்கான பணியை வடகொரியா செய்து வந்துள்ளது.
ஏன் என்றால், அந்த வழியில் இருந்துதான் மக்கள் தப்பித்து வேறு நாடுகளுக்கு சென்றதாகவும் பல்வேறு பொருள்கள் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்திற்கு வேலிகள், தடுப்புகள், மதில் சுவர்களை வடகொரியா அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.
கொரோனா காலத்தில் செய்த வேலை:
வடகொரியாவில் பொருள்கள் மற்றும் தகவல்கள் சென்று சேருவதை தடுக்க அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைகள்
உதவியுள்ளது. வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழையாமல் இருப்பதற்கும் அதன் குடிமக்கள் வெளியே செல்லாமல் உள்ளே இருப்பதற்கும் இந்த தடுப்பு வேலிகள் உதவியுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய பாதிரியார் கிம் கூறுகையில், "வட கொரியா - சீனா நாடுகளுக்கு இடையேயான பாதை இப்போது திறம்பட மூடபட்டுவிட்டது. சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாதவரை, இது இப்படியேதான் தொடரும்" என்றார். பாதிரியார் கிம் உள்ளிட்டவர்களின் உதவியில்தான் பலர் வடகொரியாவில் இருந்து தப்பித்துள்ளனர்.
வேலி அமைத்தது எதற்காக?
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டு, 1,047 பேர் வடகொரியாவில் இருந்து தப்பித்து தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டு, 67 பேர் மட்டுமே தென் கொரியாவை அடைய முடிந்தது. சீனாவில் கடுமையான விதிகள் அமலில் இருந்தததால்
வடகொரியாவில் இருந்து அதன் வழியாக தப்பித்து செல்வோரின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முன்னரே சரிவை சந்தித்து.
வழக்கமாக, வடகொரியாவில் இருந்து தப்பிப்பவர்கள் சீன வழியையே தேர்வு செய்வர். எல்லையில் சுவர் கட்டுவது குறித்து வடகொரியா அரசும், அரசு ஊடகங்களும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், கொரோனா வைரஸ் மற்றும் பிற "அன்னிய விஷயங்கள்" நாட்டிற்கு வெளியே இருப்பதை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் அதிகாரப்பூர்வ அமைப்புகள் விளக்கம் அளித்தன.
எல்லையை மூடுவது வட கொரியாவின் வணிக வர்க்கத்தின் மீது நீடித்த விளைவை ஏற்படுத்தும். வளர்ந்து வந்த முறைசாரா வர்த்தகம், மக்கள் தங்கள் சொந்த வழியை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியது. எல்லையில் உள்ள நகரங்கள், 1990 களில் பஞ்சத்திற்குப் பிறகு முறையான மற்றும் முறைசாரா வர்த்தகத்தால் பயனடைந்தன.