(Source: ECI/ABP News/ABP Majha)
Dog Suicide Bridge | நாய்களை தற்கொலைக்கு தூண்டும் மர்ம பாலம்..! ஸ்காட்லாந்தில் ஒரு அமானுஷ்ய மேம்பாலம்!
இயற்கைக்கு அப்பாற்பட்டு விசித்திரமாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்திகள் உலகம் முழுவதும் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு வழக்கமான செயலாகிவிட்டது. வருத்தம்தான் ஆனால் ஆச்சரியமில்லை. ஆனால் நாய்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்தி சற்று வியப்பாக இருக்கிறது. அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேயே அடுத்தடுத்து நாய்கள் இறப்பது மர்மமாகவே உள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள பிரபல பாலம் (ஓவர்டவுன் பிரிட்ஜ்) ஒன்றில் இதுவரையில் 50 நாய்களுக்கு மேல் தற்கொலை செய்துள்ளது. அந்த பாலம் 50 அடி உயரம் கொண்டதாக உள்ளது. அதிலிருந்துதான் நாய்கள் குதித்து இறந்துள்ளன. இயற்கைக்கு அப்பாற்பட்டு விசித்திரமாக அந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாய் உரிமையாளர்களுள் ஒருவரான லோட்டி மெக்கின்னன் தனது நாயுடன் பாலத்தில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது பெண் நாயான அது சற்று விசித்திரமாக நடந்துக்கொண்டுள்ளது. அவர் நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறும்பொழுது “ அவள் அந்த இடத்தில் அப்படியே உறைந்து நின்றாள் . அதன் பிறகு ஏதோ வித்தியாசமான எனர்ஜியுடன் அங்கிருந்து ஓடினால். அதன் பிறகு சென்ற வழியிலிருந்து மாறி , பாலத்தில் வலது புறத்தில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாள் “ என தெரிவித்திருக்கிறார்.
1950 ஆம் ஆண்இலிருந்தே இந்த பாலத்தில் வொயிட் லேடி என்னும் பேய் நடமாட்டம் இருப்பதாக சிலர் நன்புகின்றனர். ஆனாலும் அது கட்டுக்கதை என சிலர் தெரிவித்த நிலையில் , பேராசிரியர் பால் ஓவன்ஸ் என்பவர் இது குறித்து வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரையில் “ நான் அந்த பாலத்தில் நின்று , கீழே பார்த்த பொழுது யாரோ என்னை தொடுவது போல் உணர்ந்தேன்” என தெரிவித்திருந்தார். அது அப்பகுதி உள்ளூர் வாசிகளுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ஆய்வாளர்கள் இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. மனிதர்களால் சுவாசிக்க முடியாத சில வாசனைகளை கூட நாய்கள் மோப்பம் பிடிக்கும். அந்த பாலம் அமைந்திருக்கும் பகுதி ஒரு காடு என்பதால் , சில தாவரங்களின் வாசனைகள் அவற்றின் மூளையை தாக்கும் அதனால் சிக்கலுக்குள்ளாம் நாய்களின் குணங்களால் அவை வெறித்தனமாக மாறுவதிலும் ஆச்சரியமில்லை . சில தாவரங்கள் துர்நாற்றங்களை பிரதிபலிப்பதாக அமையலாம்.
மிங்க், பைன் மார்டென்ஸ் மற்றும் பிற உயிரினங்களால் நிரப்பப்பட்ட பாலத்தின் அடியில் உள்ள வாசனை, அவற்றின் உரிமையாளர்களால் அடையாளம் காண முடியாவிட்டாலும் , நாய்களால் அந்த வாசனையை அறிந்துக்கொள்ள முடியும் . அதுவரையில் பழக்கப்படாத அந்த கொடிய வாசனையை நுகர்ந்ததும் , தாங்கிக்கொள்ள முடியாமல் ஓடுகின்றன. இதனால் உடனடியாக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன என்கின்றனர். என்னதான் விளக்கம் கொடுத்தாலும் 1950 களில் இருந்தே நடக்கும் இந்த பிரச்சனையை சிலர் மர்மமாகவும் , இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயமாகவே கருதுகின்றனர்