Watch Video: சேட்டை செய்த இளைஞன்: கதிகலங்க வைத்த ஒராங்குட்டான் குரங்கு!
குரங்கு மனிதனின் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து நடந்தது அத்தனையுமே அந்த வீடியோவில் திகிலூட்டும் வகையில் பதிவாகியுள்ளது
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோ, ஒராங்குட்டான் ஒன்று தனது கூண்டின் கம்பிகள் வழியாக ஒரு மனிதனை தாக்கும் அதிர்ச்சிக் காட்சியைப் படம்பிடித்துள்ளது. இந்தோனேசிய மிருகக்காட்சிசாலையில் படமாக்கப்பட்ட வீடியோவில், குரங்கு மனிதனின் கால்களைப் பிடித்து இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. அதைத் தொடர்ந்து நடந்தது அத்தனையுமே அந்த வீடியோவில் திகிலூட்டும் வகையில் பதிவாகியுள்ளது. அது ஆன்லைனில் பெருமளவில் வைரலாகி, ட்விட்டரில் கிட்டத்தட்ட 12 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
lu yang berak ya? pic.twitter.com/FVKE6DUV2r
— neutral⚛ (@neutralizm_) June 7, 2022
ஒராங்குட்டானின் கூண்டுக்கு அருகில் நிற்கும் மனிதன், அவரது கைகளை நீட்டியவாறு கூண்டின் முன்பு நிற்கிறார். சில நிமிடங்களுக்குப் பிறகு, விலங்கு அதன் கூண்டின் கம்பிகள் வழியாக வெளியே வந்து அந்த மனிதரின் டி-சர்ட்டைப் பிடிக்கிறது.
உள்ளூர் செய்தி இணையதளம் riau.suara.com அந்த நபரை ஹசன் அரிஃபின் என அடையாளம் கண்டுள்ளது. ஜூன் 6 ஆம் தேதி இந்தோனேசியாவின் ரியாவில் உள்ள கசாங் குலிம் மிருகக்காட்சி சாலைக்கு அரிஃபின் சென்றதாக கூறப்படுகிறது. அவர் மிருகக்காட்சி சாலையின் பார்வையாளர்களிடமிருந்து ஒராங்குட்டான் கூண்டைப் பிரிக்கும் வேலியின் மீது ஏறியுள்ளார். மிருகக்காட்சிசாலையின் விதிகளை மீறியுள்ளார். அனைவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. அது ஏன் முட்டாள்தனமான முடிவு என்பதை 19 வயது இளைஞன் பிறகு கற்றுக்கொண்டுள்ளார்.
டினா என்று பெயரிடப்பட்ட குரங்கு, அவரது காலைப் பிடித்து அருகில் இழுத்தபோது அரிஃபின் கத்துவதைக் காட்சிகள் காட்டுகிறது. அவருடன் இருந்த மற்றொரு நபர் அரிஃபினை பின்னுக்கு இழுக்க முயன்றும் பலனில்லை. தப்பிக்கப் போராடியபோதும் அந்த மனிதரின் காலைப் பிடித்துக் கொண்டு அந்த ஒராங்குட்டான் விடாப்பிடியாக இழுப்பதை வீடியோ காட்டுகிறது.
அதிகாரிகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கசாங் குலிம் மிருகக்காட்சிசாலையின் மேலாளர் டெஸ்ரிசல் தெரிவித்தார். விலங்குகளின் அடைப்புகளை நெருங்க வேண்டாம் என்று பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகைகள் இருந்தபோதிலும், அரிஃபின் பாதுகாப்புச் சுவரைக் கடந்துள்ளார்.
"திங்கள் மதியம் எங்கள் மிருகக்காட்சி சாலை அதிகாரியின் அனுமதியின்றி வீடியோ எடுக்க பார்வையாளர் ஒராங்குட்டான் கூண்டின் அருகில் குதித்துள்ளார்" என்று டெஸ்ரிசல் கூறினார் என உள்ளூர் செய்தி வலைத்தளமான கொம்பாஸ் பதிவிட்டுள்ளது.
"பார்வையாளர் தடுப்புச்சுவரில் குதித்து ஒராங்குட்டானை உதைத்து விதிகளை மீறியிருக்கிறார்," என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.