Viral video: 12 லட்சம் செலவு.. உண்மையான நாயாக மாறிய மனிதர்- வைரல் வீடியோ !
மனிதர் ஒருவர் 12 லட்சம் ரூபாய் செலவு செய்து நாய் உடையை தயார் செய்ய சொல்லி அணிந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
மனிதர்கள் சில நேரங்களில் வித்தியாசமாக யோசனை செய்து செய்யும் விஷயங்களில் வேகமாக வைரலாகி விடும். அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. ஒருவர் தனக்கு நாய் போல் ஒரு உடை வேண்டும் என்று கூறி செய்ய சொன்ன ஆடை மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நாட்களாக தனக்கு நாய் போல் ஒரு உடை அணிந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்காக அவர் ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு ஒரு உடையை தயாரிக்க கூறியுள்ளார். அந்த உடையை அணிந்து கொள்ளும் போது அவர் மனிதர் கண்டறியப்பட கூடாது என்று கூறியுள்ளார்.
着ぐるみをオーダーしてました! おかげさまで動物になってみたいという夢を叶えることができました! https://t.co/jUFxSWW6cl pic.twitter.com/zJIX8VcWfm
— トコ (@toco_eevee) April 11, 2022
அவரின் கோரிக்கைக்கு ஏற்ப அந்த நிறுவனம் ஒரு ஆடைய தயார் செய்துள்ளது. அதை அணிந்து கொண்டு அந்த நபர் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் உண்மையான நாயை போல் தோற்றம் அளிக்கிறார். அவருடைய உடை அவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த உடையை தயாரிக்க அந்த நிறுவனத்திற்கு 40 நாட்கள் எடுத்ததாக தெரிகிறது. அத்துடன் இந்த உடையின் விலை சுமார் 12 லட்சம் ரூபாயாக கருதப்படுகிறது.
Oh wow. Such a great suit
— Pup Toffee (@Toffee_pup) April 11, 2022
your costume is so good! At first I thought it was an animal!
— ninteli 🇫🇷 (@ninteliruo) April 25, 2022
இவ்வாறு இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து இவர் உண்மையில் மனிதரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்