பாட்டில் செய்தியால் பக்கா அதிர்ஷ்டம் : கண்டுபிடித்து கதை சொல்லும் சுவாரஸ்ய மனிதன்..
கிளிண்ட் பஃபிங்டன் என்னும் அந்த நபர் நீர்நிலைகளுக்கு அருகில் இப்படி செய்தி அடைக்கப்பட்ட பாட்டில்கள் 100-க்கும் மேற்பட்டவற்றை சேகரித்து வருகிறார்
பாட்டிலில் செய்தியை அடைத்து தனது மனதில் இருப்பதை மறைமுகமாகச் சொல்வது எல்லாம் ராஜராஜ சோழன் காலத்து லாஜிக் என்றாலும் அதை மக்கள் இன்றும் விரும்பி செய்கிறார்கள்.
அண்மையில் கரீபியன் தீவுகளில் விடுமுறைக்கு சென்றபோது உதா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கே கடற்கரையில் அது போன்ற பாட்டிலில் அடைக்கப்பட்ட செய்தி கடற்கரையில் இருப்பதைக் கண்டார். அந்த பாட்டிலில் இருந்த செய்தியைப் படித்த அந்த நபர் அன்றிலிருந்து அதை எழுதிய நபரைத் தேடிக்கொண்டிருக்கிறார். கிளிண்ட் பஃபிங்டன் என்னும் அந்த நபர் நீர்நிலைகளுக்கு அருகில் இப்படி செய்தி அடைக்கப்பட்ட பாட்டில்கள் 100-க்கும் மேற்பட்டவற்றை சேகரித்து வருகிறார். அப்படித்தான் பிப்ரவரியில் கரீபியன் பயணத்தின் போது ஒரு பாட்டிலைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
மேலும் அந்த பாட்டிலில் "இந்தச் செய்தியைக் கண்டுபிடித்தவருக்கு நல்ல அதிர்ஷ்டம் கைகூடும் " என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பஃபிங்டன் கேஜிடபிள்யூ-டிவியிடம் கூறினார். "இது வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பெக்கி மற்றும் போர்ட்லேண்ட் ஓரேவில் உள்ள ஜிம் ஆகியோர் எழுதிய பாட்டில்” என்று அதுகுறித்து தனது வலைப்பதிவில் செய்தி வெளியிட்டுள்ள கிளீண்ட். அந்த தகவலில் மின்னஞ்சல் முகவரி இருந்ததாகவும் ஆனால் அதற்கு மெயில் அனுப்பினால் அதற்கு எவ்வித விடையும் வரவில்லை என்றும் கூறினார்.
View this post on Instagram
அவர் இப்போது சமூக ஊடகங்கள் வழியாக பெக்கி மற்றும் ஜிம்மை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்.
"இந்தச் செய்தி 2018ல் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் இருந்து ஒரு படகில் இருந்து அனுப்பப்பட்டது" என்று பஃபிங்டன் ஒரு பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார். "வாஷிங்டன், டி.சி.யைச் சேர்ந்த பெக்கியை உங்களுக்குத் தெரியுமா? அல்லது போர்ட்லேண்ட், ஓரிகானைச் சேர்ந்த ஜிம் என்பவரையாவது தெரியுமா? அவர்களின் பாட்டிலைத் திறந்ததிலிருந்து நான் பெற்ற அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்!" என்று கிளீண்ட் அந்த பதிவில் கூறியுள்ளார்.