Kamala Harris Covid Positive: அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸிற்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையிலிருந்து வெளியாகிய தகவலின்படி இன்று அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் பெரிதாக காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
#BREAKING US Vice President Kamala Harris tests positive for Covid: White House pic.twitter.com/Ay0lLjWT5g
— AFP News Agency (@AFP) April 26, 2022
மேலும் அவர் துணை ஜனாபதியின் இல்லத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோருடன் தொடர்பில் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிற்கு கொரோனா தொற்று உறுதியாக வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்