மேலும் அறிய

Vivek Ramaswamy : “இந்தியரான விவேக் ராமசாமிக்கு அமெரிக்காவில் புதிய பொறுப்பு” அறிவித்தார் அதிபர் ட்ரம்ப்!

"அமெரிக்காவின் தேச பக்தர் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" ட்ரம்ப்

உலகையே தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் ஆராய்சிகள் மூலம் கதிகலங்க வைக்கும் வல்லமை படைத்த எலான் மஸ்கை, விஞ்ஞான ஆராய்சிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நீ வந்து அமெரிக்காவை கவனி என்று அழைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப். அதே நேரத்தில் இந்தியாவை அதுவும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட விவேக் ராமசாமிக்கும் புதிய பொறுப்பை கொடுத்துள்ளார் ட்ரம்ப். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய சாதக அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்க பதவியில் மஸ்க், விவேக் ராமசாமி

DOGE - அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவர் பதவிக்கு எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகிய இருவரையும் தலைவராக நியமித்துள்ளார் டிரம்ப். இதனால் இனி அமெரிக்கர்கள் வேலை நேரத்தில் OP அடிக்க முடியாது, தேவையின்றி பணத்தை செலவு செய்ய முடியாது, அரசு சொத்துகளை அதிகாரிகள் நஷ்டமடைய விட முடியாது.. இப்படி பல்வேறு விஷயங்களை கண்கானிக்கும் DOGE துறையின் தலைவராக எலான் மஸ்க் தேர்ந்தெடுக்கபட்டுள்ளதால், அமெரிக்கர்கள் கலக்கத்தில் உள்ளனர்..

ட்ரம்ப் வெற்றிக்கு பாடுப்பட்ட மஸ்க்

சமீபத்தில் ட்விட்டர் சமூக வளைத்தளத்தை வாங்கிய எலான் மஸ்க் , அதன் பெயரை எக்ஸ் என்று மாத்தினார், அதில் பெரும்பாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற பெருமளவில் உதவினார் எலான் மஸ்க். இந்நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு புதிய பொறுப்பை எலான் மஸ்கிடம் வழங்கி உள்ளார் டிரம்ப். அவரோடு சேர்த்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமிக்கும் அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எலான் மஸ்க் எந்த காரியத்தில் இறங்கினாலும் அவரின் செயல்பாடுகள் எப்போதுமே பல்வேறு தரப்பில் இருந்தும் விவாதங்களை கிளப்பி பேசு பொருளாகும் நிலையில்,  இந்த புதிய பொறுப்பின் மூலம் அவர் அமெரிக்காவில் என்ன என்ன மாற்றங்களை செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

என்ன சொன்னார் ட்ரம்ப் ?

இது தொடர்பாக டிரம்ப் பேசுகையில், அமெரிக்காவின் தேச பக்தர் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் அரசாங்கத் திறன் துறைக்கு ("DOGE") தலைமை தாங்குவார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு நல்ல பங்களிப்பை கொடுப்பார்கள். அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில்.. தேவையற்ற நேரம், பணம் வீணாவதை தடுக்கும் விதமாகவும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த துறைக்கு இவர்கள் இருவரும் தலைமை தங்குவார்கள். "சேவ் அமெரிக்கா" என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. ”என்று டிரம்ப் கூறி உள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு கடிவாளம்

அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா? அவர்கள் எங்கே தவறு செய்கிறார்கள்? எங்கே நேரம் செலவாகிறது? எங்கே பணம் வீணடிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது இனி உடனடி ஆக்‌ஷனை மஸ்க் எடுப்பார் என்று டிரம்ப் ஏற்கனவே பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். அதனால் ஊழியர்கள் இனிமேல் OP அடிக்க முடியாது, அரசாங்க பணத்தை சரியாக கையாள வேண்டும். மஸ்க் நினைத்தால் அமெரிக்க அரசாங்கத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை வேண்டுமானாலும் செய்ய முடியும். அதேபோல்,பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக எலான் மஸ்க் பங்கேற்பார். அதே நேரம் பெயரில் அரசாங்கம் என இருந்தாலும் Department of Government Efficiency அரசாங்கதுறை அல்ல. அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தே ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் துறைமட்டுமே.

கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஏற்கனவே ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், அங்கே பல அதிரடி மாற்றங்களை செய்திருந்தார். முதல் நாள் OFFICE-குள் நுழைந்த எலான் மஸ்க் டாய்லெட் பேசினை எடுத்துகொண்டு வந்த சம்பவத்தை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சிரியமாக பார்த்தது. குறிப்பாக பல அதிகாரிகளை, ட்விட்டரின் ஊழியர்களை FIRE செய்த எலான் மஸ்க், ட்விட்டரில் இருந்த பல கட்டுப்பாடுகளை நீக்கினார். மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். SUBSCRIPTION முறையை கொண்டு வந்து வணிக ரீதியிலான ஒரு நிறுவனமாக எக்ஸ் தளத்தை மாற்றினார். இப்படி அதிரடிக்கு பெயர் போன எலான் மஸ்க், தற்போது அமெரிக்க அரசாங்கத்தை கண்காணிக்க உள்ளதால், அமெரிக்கர்கள் கலங்கி போய் இருக்கிறார்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
CM Stalin: ’’ஸ்டாலின் பெயரும் திராவிட அரசும் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்’’ முதல்வர் பெருமிதப் பேச்சு!
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
Kalaignar Centenary Hospital : கிண்டி HOSPITAL-ல் மீண்டும் பகீர்! உயிரிழந்த இளைஞர்.. ஆத்திரத்தில் உறவினர்கள்
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
அப்செட்டில் அறிவாலயம்! தி.மு.க. கோட்டையில் ஓட்டை போடும் விஜய் - அப்படி என்ன நடந்தது?
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
ஆசிரியர்களுக்கு வார்டன் பணி; அமைச்சருக்கே தெரியாதா? உடனே விசாரணை நடத்தக் கோரிக்கை
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Jayam Ravi Aarthi :ஒரு தடவ பேசிப்பாருங்க! ஜெயம் ரவி - ஆர்த்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் ஆர்டர்!
Mayiladuthurai: 300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
300 போலீஸார் 32 கேமராக்கள் - கண்காணிப்பு வளையத்தில் மயிலாடுதுறை நகரம்...!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Embed widget