‛டாட்டா... பை பை...’ சொன்ன அமெரிக்கா... துப்பாக்கி தோட்டாக்களில் வானவேடிக்கை காட்டிய தலிபான்கள்!
கடைசி அமெரிக்க ராணுவ வீரர் காபூலில் இருந்து வெளியேறும் படத்தை அமெரிக்க ராணுவம் பதிவிட்டுள்ளது..
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து முழுமையாக வெளியேறியதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க தூதர் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய கடைசி விமானம் நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அமெரிக்கர்களை மீட்பதுடன் முழுமையாக வெளியேறுவோம் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். அதன்படி, அங்கிருந்து நள்ளிரவு அமெரிக்கர்கள் வெளியேறினார்கள். கடைசி அமெரிக்க ராணுவ வீரர் காபூலில் இருந்து வெளியேறும் படத்தை அமெரிக்க ராணுவம் பதிவிட்டுள்ளது. இந்தப்புகைப்படம் சமூகவலைதலங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்த நிலையில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், ஆப்கான் மக்களுக்கு தேவையான உதவிகளை ஐநா சபை மற்றும் என்ஜிஓக்கள் மூலம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
"The last American soldier to leave Afghanistan- Major General Chris Donahue, boarded C-17 aircraft on August 30, marking the end of US mission in Kabul," tweets US Department of Defense pic.twitter.com/nScjl4Hfao
— ANI (@ANI) August 31, 2021
இதனைதொடர்ந்து, அமெரிக்கர்கள் வெளியேறியதை கொண்டாடும் விதமாக காபூலில் தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
"US commander, ambassador were last to board evacuation flight," AFP quotes General pic.twitter.com/eeemixtmx7
— ANI (@ANI) August 30, 2021
I announce the completion of the withdrawal of US troops from Afghanistan and the end of the military mission to evacuate American citizens and Afghans... The last C-17 lifted off from Hamid Karzai Airport on August 30 this afternoon at 3:29 pm: US General Kenneth F. McKenzie pic.twitter.com/9pdokcEqBe
— ANI (@ANI) August 30, 2021
Afghanistan Crisis: எங்க குரலைக் கேளுங்க... காப்பாத்துங்க.. ஆப்கான் பத்திரிக்கையாளர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்