Afghanistan Crisis: எங்க குரலைக் கேளுங்க... காப்பாத்துங்க.. ஆப்கான் பத்திரிக்கையாளர்கள் ஐ.நா சபைக்கு கடிதம்
தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து எங்கள் வாழ்க்கை முடங்கிவிட்டது. குடும்பத்தில் நான் மட்டுமே வருமான ஈட்டி வருகிறேன் - நசிபா அஹமதி, பெண் நிருபர்
பலரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கடிதத்தில் தலிபான் அமைப்புகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், "ஊடகப் பணியாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், உடமைகளையும் பாதுகாக்க போராடி வருகின்றனர். இந்த அசாதாரண சூழலால் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, எங்கள் உயிர்களையும், உடைமைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அவை மற்றும் உறுப்பு நாடுகளை கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடக்கும் சம்வங்களை உலக நாடுகள் கண்டும் காணாமலும் இருக்கக்கூடாது. கடந்த இரண்டு தசாப்தங்களாக கருத்து சுதந்திரத்திற்காக அயராது உழைத்த ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெகுவிரைவில் மாறக்கூடிய வாழ்கையை வாழ்ந்து வருகிறோம். இந்த நிச்சயமற்ற காலங்களில் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. உலகம் எங்கள் குரல்களை கேட்க முன்வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் 30-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிக்கையாளர்கள் கையொப்பமிட்டுள்ளனர். பெண் நிருபர் நசிபா அஹமதி இதுகுறித்து கூறுகையில், " தாலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து எங்கள் வாழ்க்கை முடங்கி விட்டது. குடும்பத்தில் நான் மட்டுமே வருமான ஈட்டி வருகிறேன். ஆனால், தற்போது குடும்பத்துக்கு உணவளிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் நாட்டைக் கைப்பற்றிய பின்னர், மேற்கத்திய நாடுகள் தங்களது குடிமக்களை தாயகத்துக்கு அழைத்து வரும் பணியை முடிக்கி விட்டிருந்தன. முன்னதாக, தாலிபான் ஆட்சிப்படியில் இருந்து தப்பிக்க பத்திரிகையாளர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் மூன்று ஆப்கன் பத்திரிக்கையாளர்கள் உட்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்காக காபூல் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, இஸ்லாமிய சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உரிமைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஊடக நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல்களை கருத்தில் கொண்டு, நாளையுடன் ( 31-ம் தேதி) ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும் என்று ஜோ பைடன் அரசு கூறியது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி முதல் இதுநாள் வரையில் 5,000க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், வாசிக்க: