‛ஆம்பளையா... அடிச்சு விரட்டு...’ ஆண்களே இல்லாத கிராமம்.. பெண்கள் மட்டுமே அனுமதி... ஏன்... எதற்கு?
ஆண்களே இல்லாத கிராமம் ஒன்று உலகத்தின் ஒரு மைய பகுதியில் அமைந்துள்ளது.
உலகில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து வசிக்க பல இடங்கள் உள்ளன. ஆனால் அதற்கு மாறாக பெண்கள் மட்டும் வசிக்கும் இடம் ஒன்று உள்ளது என்றால் அது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நம்மில் பலர் கற்பனைக்கு ஆண்கள் இல்லாத உலகம் அல்லது பெண்கள் இல்லாத உலகம் என்று கூறி வருகிறோம். அந்தவகையில் இங்கு ஒரு கிராமமே ஆண்கள் இருந்து இயங்கி வருகிறது. அப்படி அந்த கிராமம் எங்கே உள்ளது? ஆண்கள் அங்கு இல்லாததற்கு காரணம் என்ன?
ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள கென்யா நாட்டில் உமோஜா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் ராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் வசித்து வருகின்றனர். அதேபோல் சிறு வயதில் திருமணம் செய்யப்பட்ட பெண்கள், தன்னுடைய கணவர் வீட்டில் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் இங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கு ஆண்கள் சிறிய குழந்தைகளாக வாழ முடியும். அவர்களை தவிர வேறு எந்தவித ஆண்களுக்கும் இங்கு வசிக்க அனுமதி இல்லை.
இந்த கிராமத்தில் வசிக்கும் சம்புரு இன மக்கள் தங்களுடைய வீட்டிற்கு அருகே பாதுகாப்பிற்காக முற்களை போட்டு வருகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து வருகின்றனர். தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அவர்கள் பாசிமணி போன்றவற்றை தயாரித்து வருகின்றனர். அதை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்ளிடவர்களிடம் விற்று தங்களுடைய வருவாயை ஈட்டி வருகின்றனர்.
மேலும் இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் எந்தவித கட்டுபாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக வசித்து வருகின்றனர். இவர்கள் மசாய் என்ற இனத்தின் மொழியை பேசி வருகின்றனர். தற்போது அந்த கிராமத்தில் சுமார் 47 குடும்பங்கள் மற்றும் 200 குழந்தைகள் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடு மாடுகளை மெய்பது உள்ளிட்ட விஷயங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு குழந்தைகள் படிக்க ஒரு சில பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதி மக்கள் தங்களுடைய நோய்கள் மற்றும் காயங்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தை நம்பி இருக்கின்றனர். இங்கு வசிக்கும் பல பெண்கள் கொத்தடிமைகளாக அவர்களுடைய தந்தை அல்லது கணவர்கள் வாங்கிய கடன்களுக்கு விற்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிலர் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமையை அனுபவத்துள்ளனர். அவர்களுக்கு இனிமேல் ஆண்களுடன் சேர்ந்து வாழும் எண்ணமே இல்லை என்றும் கூறி வருகின்றனர். இதுவே இந்த கிராமத்தினரின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் பெண்களுக்கு எதிராக குற்றச்சமப்வங்கள் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. அவர்களுக்கு ஒரு பிரச்னை ஆண்கள் உடன் வாழ்வது தான் என்று குறிப்பிடுகின்றனர்.
மேலும் படிக்க: ‛எனக்கும் டெஸ்ட்... பண்ணுங்க...’ - சிறு குழந்தையின் வைரல் வீடியோ!