Ukraine Student Interview: “24 மணிநேரத்துல எல்லாம் முடிஞ்சிடும்” - உக்ரைனில் இருந்து தமிழக மாணவர் பகிர்ந்த தகவல்
ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை விட ராணுவ பலத்தில் ரஷ்யா யானை பலத்துடன் இருக்கிறது. தன்னுடைய ராணுவ பலத்தில் குறைந்த வலிமையுடன் இருக்கும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போதைய நிலை குறித்து உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசி அறிந்துகொள்ளவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா கொத்துக் குண்டுகளை வீசி தாக்கும் நிலையில் இந்தியாவுக்கு உக்ரைன் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் பயிலும் தமிழக மருத்துவ மாணவர் ஒருவர் ஏபிபி நாடு செய்தி தளத்திடம் பேசி இருக்கிறார். அதில், “உக்ரைனில் நடந்து வரும் பதற்ற சூழலில், நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன். உக்ரைனை இரண்டு பிரிவாக பிரிக்கலாம். கிழக்கு உக்ரைன் மற்றும் மேற்கு உக்ரைன். மேற்கு உக்ரைனைவிட கிழக்கு உக்ரைனை சேர்ந்த பகுதிகள் மிகவும் பாதிக்கபப்ட்டுள்ளது. அங்கிருக்கும் என்னுடைய நண்பர்கள், கண் முன்னே குண்டுகள் வெடிப்பதாக தெரிவித்துள்ளனர். இணைய சேவை, மின் விநியோகம் ஆகியவற்றை பொறுத்தவரை இங்கு எந்த பாதிப்பும் இல்லை. சைபர் அட்டாக்கினால் எந்த சிஸ்டமும் பாதிக்கப்படவில்லை. ஆனால், விமான சேவையை பொறுத்தவரை நிறைய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை மார்கமாக ரொமானிய எல்லைக்கு சென்று வேறு பகுதிகளுக்கு செல்லலாம்” என தெரிவித்துள்ளார்.
வீடியோவை காண:
தொடர்ந்து பேசிய அவர், “இதுவரை இந்திய அரசு சார்பாக 4 விமானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் பாதுகாப்பாக இருக்க சொல்லி பேசி வருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். விடுதிகளில் உள்ளனர். அடுத்த 24 மணிநேரத்தில் இது முடிந்துவிடும். ஆனால், உக்ரைன் மக்கள் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். ஓரளவு மக்கள் தைரியமாக இருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை உக்ரைன் ஒரு பாதுகாப்பான நாடாகவே இருந்தது. ரொம்ப அமைதியான நாடாக இருந்தது. அந்த நாடு பாதிக்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்