ட்விட்டரின் 75% ஊழியர்கள் நீக்கப்படுவார்கள்… பயமுறுத்திய மஸ்க்! மறுத்த நிர்வாகம்… எது உண்மை?
நிறுவனம் பணிநீக்கங்களுக்கான திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியது. ஆனாலும் மஸ்க் நிறுவனத்தை வாங்கிய பிறகு நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.
75 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்வோம் என்ற எலன் மஸ்கின் கூற்றைத் தொடர்ந்து தற்போதைய நிறுவன மனிதவள மேலாண்மைக் குழு அதனை மறுத்துள்ளது.
பயமுறுத்திய எலன் மஸ்க்
வியாழனன்று வாஷிங்டன் போஸ்ட், நேர்காணல்கள் மற்றும் பதிவுகளை மேற்கோள் காட்டி, பில்லியனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான தனது முயற்சியில் மொத்தமுள்ள 7,500 ஊழியர்களில் 75 சதவீதத்தை பணிநீக்கம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்த நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் பதற்றம் அடைந்து இருந்தனர். இதனை அவர் கூறியது வைரலானதற்கு ஒரு நாள் கழித்து ட்விட்டர் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
நிறுவனம் பணிநீக்கங்களுக்கான திட்டங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை என்பதை ஊழியர்களுக்கு தெளிவுபடுத்தியது. ஆனாலும் மஸ்க் தான் வருங்கால முதலாளி என்பதால், இது அவர் வாங்கிய பிறகு நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.
ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய நிர்வாகம்
ட்விட்டர் ஜெனரல் ஆலோசகர் சீன் எட்ஜெட் வியாழக்கிழமை ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார், நிறுவனம் பணிநீக்கங்களைத் திட்டமிடவில்லை என்று மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிறுவனம் யாருடையது என்பதைப் பொருட்படுத்தாமல், வரவிருக்கும் மாதங்களில் வேலைகள் பரிப்போகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள் : கணவனுக்கு கல்தா..! 17 பவுனுடன் மாயமான மனைவி...! நடந்தது என்ன தெரியுமா...?
தானாக வெளியேறுவார்கள்
ஆதாரத்தின்படி, ட்விட்டரின் தற்போதைய நிர்வாகம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறுவனத்தின் ஊதியத்தை சுமார் $800 மில்லியன் குறைக்க எண்ணியுள்ளது, இதன் விளைவாக நான்கில் ஒரு பங்கு ஊழியர்கள் அவர்களாகவே வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே கூறப்பட்டபடி நிர்வாகம் செலவை குறைக்கும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிர்வாகம்
வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், சமூக ஊடக நிறுவனத்தின் மனிதவளத் துறையிடம் இருந்து பெரிய அளவில் பணியாளர்களை பணியில் இருந்து நீக்கமாட்டோம் என்கிற உறுதிமொழிகள் வந்திருந்தாலும், பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி, உள்கட்டமைப்பு செலவுகளைக் குறைப்பதற்காக, மஸ்க் வாங்குவதாக அறிவிப்பதற்கு முன்பே நிர்வாகம் திட்டமிட்டு வந்தது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்திற்கு மெயிலில் கேள்விகள் அனுப்பி இருந்தது, அவர்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மே மாதம், மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயன்றார், நிறுவனம் சமூக ஊடகத் தளத்தில் ஸ்பேம் மற்றும் போட் கணக்குகளின் எண்ணிக்கையை தவறாகக் கூறியதாகக் காரணம் கூறினார். இதனால் இரு தரப்புக்கும் இடையே சட்ட ரீதியான மோதல் ஏற்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் மஸ்க் தனது மனதை மாற்றிக்கொண்டு, அதன் அசல் விதிகளின்படி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக அறிவித்தார்.