Turkey : 'முன்னாடியே சொன்னேனே’ : துருக்கி நிலநடுக்கம்...4 நாள்களுக்கு முன்பே கணித்த ஆராய்ச்சியாளர்..வைரலாகும் பதிவு..!
துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் வரும் என்று 4 நாள்களுக்கு முன்பே ஆராய்ச்சியாளர் எச்சரித்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் மூன்று முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இருநாடுகளுக்கும் பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகள் நிவாரண உதவிகளையும், மீட்புப் படைகள் உள்ளிட்டவற்றை அனுப்பியும் உதவி வருகின்றன.
இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் விரைவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர் ஒருவர் முன்பே எச்சரித்துள்ள ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. டச்சு நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளரான ஃப்ரான்க் ஹூக்கர் பீட்ஸ் கடந்த பிப்ரவரி 3ம் தேதியே நிலநடுக்கம் குறித்து எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டிருந்த அவர், விரைவில் அல்லது பின்னர் தெற்கு மற்றும் மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய இடங்களில் 7.5 மெக்னிட்யூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். அவரது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
அதேபோல அவரது எஸ்எஸ்ஜியோஸ் என்ற பக்கத்தில் பிப்ரவரி 4 முதல் 6 வரை பெரிய நில அதிர்வு செயல்பாடுகள் ஏற்படலாம், பெரும்பாலும் மிதமான அல்லது அதிக அளவாக 6 வரை இருக்கலாம். பிப்ரவரி 4 ஆம் தேதியன்று ஒரு பெரிய நில அதிர்வு நிகழ்வுக்கான சிறிய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பலத்த நில அதிர்வுக்குப் பிறகு மேலும் சில நிலநடுக்கங்கள் தொடரும் என்றும் அவர் கணித்துள்ளார். அதன் பிறகு மேலும் இரண்டு முறை பலத்த நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sooner or later there will be a ~M 7.5 #earthquake in this region (South-Central Turkey, Jordan, Syria, Lebanon). #deprem pic.twitter.com/6CcSnjJmCV
— Frank Hoogerbeets (@hogrbe) February 3, 2023
நிலநடுக்கம் ஏற்படும் என்று கணிப்பதற்கான அறிவியல் பூர்வமான அடிப்படை ஏதும் கிடையாது என்று பலர் மறுத்துள்ள நிலையில் ஃப்ரான்க் அதை ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ஆமாம்.
கோள்கள் மற்றும் நிலவு ஆகியவற்றின் தொடர்புகள் பற்றி விஞ்ஞானிகளுக்குள் பல்வேறு எதிர்ப்புகள் உள்ளது. ஆனால் மறுப்பதற்கான விரிவான ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை. இது வெறும் அனுமானம் மட்டும் தான் என்று கூறியுள்ளார்.